ரிஷபம் ஆனி மாத ராசி பலன் 2023!

ரிஷப ராசி அன்பர்களே! ஆனி மாதத்தில் 2 ஆம் இடத்தில் தனஸ்தானம் விருத்தி அடைகின்றது. சூர்யன்- புதன் சேர்க்கையால் எந்தவொரு விஷயத்தையும் திட்டமிட்டு மிகவும் நேர்த்தியாக செய்து முடிக்கலாம்.

பணப் புழக்கம் சிறப்பாக இருக்கும். உங்களின் வார்த்தை சாமர்த்தியமானதாக இருக்கும். ஏற்கனவே கொடுத்த கடன் உங்களைத் தேடி வந்து சேரும். சுய தொழில் செய்வோர், வியாபாரிகளுக்கு ஏற்றம் நிறைந்த காலகட்டமாகும்.

சாமுத்ரிகா லட்சணப்படி மச்ச பலன்கள்!

3 ஆம் இடத்தில் சுக்கிரனும் செவ்வாய் பகவானும் இணைந்து இருப்பதால் உடலில் சிறு சிறு உபாதைகள் இருந்து கொண்டே இருக்கும். வெளிநாடு செல்ல முயற்சித்து வந்தோருக்கு எண்ணிய எண்ணம் கைகூடும்.

பல ஆண்டுகளாக சரியான வேலைவாய்ப்பு இல்லாமல் இருந்தநிலையில் புதிய வேலைவாய்ப்புகள் கிடைக்கப் பெறும். மேலும் பதவி உயர்வு, சம்பள உயர்வு என நீங்கள் எதிர்பார்த்ததுபோல் இருக்கும். எடுத்த காரியங்களில் மிகப் பெரிய வெற்றி கிடைக்கும்.

பல ஆண்டுகளாக தடங்கல்கள் ஏற்பட்டுத் தள்ளிப் போன திருமணங்களும் நடந்தேறும். பொருளாதார ஏற்றம் சிறப்பாகவே இருக்கும்; வாங்கிய பழைய கடன்களை அடைப்பீர்கள்.

மேலும் சேமிப்பில் அதிகக் கவனம் செலுத்துவீர்கள்.

உங்கள் பிறந்தக் கிழமைக்கான பலன்கள் இதோ!

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews