அன்லிமிடெட் டேட்டா, கால்.. 84 நாட்கள் வேலிடிட்டி.. ஜியோவின் இரண்டு புதிய திட்டங்கள்..!

இந்தியாவில் தனியார் தொலைதொடர்பு நிறுவனங்களில் நம்பர் ஒன் நிறுவனமாக இருக்கும் ஜியோ அவ்வப்போது தனது மில்லியன் கணக்கான வாடிக்கையாளர்களுக்கு புதிய அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது என்பதும் புதுப்புது திட்டங்களை வெளியிட்டு வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். அந்த வகையில் 84 நாட்கள் வேலிடிட்டி உடன் அன்லிமிடெட் அழைப்பு மற்றும் டேட்டா உடன் கூடிய இரண்டு புதிய திட்டங்களை ஜியோ நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த திட்டங்கள் குறித்து தற்போது பார்ப்போம்.

ஜியோவின் இந்த இரண்டு திட்டங்களின் விலை ரூ. 739 மற்றும் ரூ. 789 ஆகும். இதில் பயனர்கள் முறையே 126GB மற்றும் 168 GB டேட்டாவை பெறுவார்கள். மேலும் பயனர்கள் வரம்பற்ற இலவச அழைப்பு மற்றும் 84 நாட்களுக்கு தினமும் 100 எஸ்எம்எஸ் அனுப்பும் வசதியையும் பெறுவார்கள்.

ஜியோ ரூ. 739 திட்ட விவரங்கள்:

739 ரூபாய் திட்டம் பயனர்களுக்கு மொத்தம் 126 ஜிபி டேட்டாவை வழங்குகிறது. இதோடு தினசரி வரம்பு 1.5 ஜிபியையும் பயன்படுத்தப்படலாம். மேலும் JioSaavn Pro, Jio TV, JioSecurity, JioCinema மற்றும் JioCloud போன்ற பல்வேறு ஜியோ பயன்பாடுகளுக்கான இலவச சந்தாக்களையும் பயனர்கள் பெறுவார்கள்.

ஜியோ ரூ. 789 திட்ட விவரங்கள்:

இந்த திட்டத்தில், பயனர்கள் 168 ஜிபி அதிவேக டேட்டாவை பெறுவார்கள், தினசரி வரம்பு 2 ஜிபி அதிவேக டேட்டாவும் கிடைக்கும். இந்த திட்டத்தில் வரம்பற்ற இலவச அழைப்பு மற்றும் 84 நாட்களுக்கு தினமும் 100 SMS அனுப்பும் வசதியும் உண்டு.

பிற புதிய ஜியோ ப்ரீபெய்ட் திட்டங்கள்:

ஜியோ ரூ 269 திட்டம்: இந்த திட்டம் தினசரி 1.5 ஜிபி டேட்டா கேப் மற்றும் 28 நாள் பேக் செல்லுபடியாகும்.

ஜியோ ரூ 529 திட்டம்: இந்த திட்டத்தின் பயனர்கள் 56 நாட்கள் வேலிடிட்டி மற்றும் ஒரு நாளைக்கு 1.5 ஜிபி அதிவேக டேட்டாவைப் பெறுகிறார்கள்.

ஜியோ ரூ 589 திட்டம்: பயனர்கள் 2 ஜிபி தினசரி டேட்டா அலவன்ஸுடன் 56 நாள் ப்ரீபெய்ட் பேக்கேஜைப் பெறுகிறார்கள்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews