ரியல்மி போன் பயனர்களின் டேட்டாவை திருடுகிறதா? அதிர்ச்சி தகவல்..!

ரியல்மி போன்களை பயன்படுத்தும் பயனர்களின் டேட்டாக்கள் திருடப்படுவதாக வெளிவந்திருக்கும் செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

ரியல்மீ போன்களில் உள்ள நுண்ணறிவு சேவைகள் பயனர்களின் டேட்டாவை திருடுவதாகவும் இதனை அடுத்து பயனர்கள் தங்கள் டேட்டாவை கவனமுடன் பாதுகாத்து வைத்துக் கொள்ள வேண்டும் என்றும் கூறப்படுகிறது.

ரியல்மி பயனர்களின் எஸ்எம்எஸ் செய்திகள்ம் அழைப்பு பதிவுகள் மற்றும் இருப்பிட தகவல்கள் உள்பட பல்வேறு டேட்டாக்கள் விளம்பரம், சந்தை ஆராய்ச்சி மற்றும் அரசாங்க கண்காணிப்பு போன்றவற்றிற்காக திருடப்படுவதாக கூறப்படுகிறது.

இது குறித்து இந்திய அரசின் எலக்ட்ரானிக் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் ரியல்மி நிறுவனம் டேட்டா பாதுகாப்பு சட்டங்களை மீறி உள்ளதா என்பதை ஆராயும் என்று கூறியுள்ளது.

இந்த நிலையில் ரியல்மி பயனர்கள் தங்கள் செல்போனில் கீழ்கட்டவற்றை செய்து தங்கள் டேட்டாக்களை பாதுகாத்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறது. Settings > Additional Settings > System Services > Enhanced Intelligent Services.

இருப்பினும் அனைத்து ரியல்மி செல் ஃபோன்களிலும் இந்த நுண்ணறிவு சேவைகள் அம்சங்கள் இல்லை என்றும் ஆனால் அதே நேரத்தில் உங்கள் ஃபோன்களின் அமைப்புகளை சரி பார்த்து அது இயக்கப்பட்டுள்ளதா என்பதை கவனித்துக் கொள்வது நல்லது என்றும் அறிவுறுத்தப்படுகிறது.

உங்கள் ரியல்மி ஃபோனில் உங்கள் தனியுரிமையைப் பாதுகாப்பதற்கான சில குறிப்புகள் இங்கே:

* மேம்படுத்தப்பட்ட நுண்ணறிவு சேவைகள் அம்சத்தை முடக்கவும்.

* பயன்பாடுகளுக்கு நீங்கள் என்ன அனுமதிகளை வழங்குகிறீர்கள் என்பதில் கவனமாக இருக்கவும்.

* நம்பகமான மூலங்களிலிருந்து மட்டுமே பயன்பாடுகளை நிறுவவும்.

* பொது வைஃபையைப் பயன்படுத்தும் போது VPN ஐப் பயன்படுத்தவும்.

* சமூக ஊடகங்களின் அபாயங்கள் குறித்து எச்சரிக்கையாக இருங்கள்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews