ரூ.6,299 விலையில் இவ்வளவு சிறப்பான ஒரு ரியல்மி ஸ்மார்ட்போனா?

இந்தியாவைப் பொறுத்தவரை ரியல்மீ தயாரிக்கும் ஸ்மார்ட் ஃபோன்களுக்கு நல்ல வரவேற்பு இருக்கும் என்பது தெரிந்ததே. அதனால்தான் இந்தியாவில் அதிகமாக ரியல்மீ ஸ்மார்ட் ஃபோன்கள் விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் ரியல்மீ நிறுவனத்தின் Realme narzo 50i என்ற மாடல் குறித்து தற்போது பார்ப்போம்.

Realme Narzo 50i ஸ்மார்ட்போன் இந்தியாவில் கடந்த 2021ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் அறிமுகப்படுத்தப்பட்டடது. இந்த மாடல் Unisoc SC9863 ஆக்டா-கோர் செயலி மூலம் இயக்கப்படுகிறது. மேலும் 6.5-இன்ச் HD+ டிஸ்ப்ளே, 2ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் ஆகிய அம்சங்களும், மைக்ரோ எஸ்டி கார்டு மூலம் 256ஜிபி வரை கூடுதல் ஸ்டோரேஜ் பெற முடியும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Realme Narzo 50i ஸ்மார்ட்போனில் 8 மெகாபிக்சல் பின்புற கேமரா மற்றும் 5 மெகாபிக்சல் செல்பி கேமரா கொண்டுள்ளது. இது Realme UI Go பதிப்புடன் Android 11 இல் இயங்குகிறது. 5000mAh பேட்டரி இருப்பதால் ஒரு நாள் முழுவதும் சார்ஜ் நிற்கும். புதினா பச்சை மற்றும் கார்பன் பிளாக் ஆகிய இரண்டு வண்ணங்களில் இந்த ஸ்மார்ட்போன் கிடைக்கும்.

இந்தியாவில் Realme Narzo 50i 2ஜிபி ரேம் + 32ஜிபி ஸ்டோரேஜ் மாடல் விலை ரூ.6,299க்கும், 4ஜிபி ரேம் + 64ஜிபி ஸ்டோரேஜ் மாடல் விலை ரூ.7,999க்கும் கிடைக்கிறது.

Realme Narzo 50i மாடலில் உள்ள சிறப்பம்சங்களை சுருக்கமாக பார்ப்போம்.

* 6.5-இன்ச் HD+ (720 x 1600 பிக்சல்கள்) IPS LCD டிஸ்ப்ளே
* Unisoc SC9863 ஆக்டா-கோர் செயலி
* 2ஜிபி/4ஜிபி ரேம்
* 32ஜிபி/64ஜிபி மற்றும் மைக்ரோ எஸ்டி கார்டு வழியாக 256ஜிபி வரை விரிவாக்கக்கூடியது
* 8 மெகாபிக்சல் பின்புற கேமிரா
* 5 மெகாபிக்சல் செல்பி கேமிரா
* 5000mAh பேட்டரி
* ஆண்ட்ராய்டு 11 உடன் ரியல்மி யுஐ கோ எடிஷன் ஆப்பரேட்டிங் சிஸ்டம்
* கைரேகை சென்சார், ப்ராக்ஸிமிட்டி சென்சார், சுற்றுப்புற ஒளி சென்சார்
* 164.5 x 75.7 x 9.1 மிமீ அளவு
* 205 கிராம் எடை

பெரிய டிஸ்ப்ளே, நீண்ட பேட்டரி ஆயுள் மற்றும் சிறந்த கேமரா கொண்ட ஸ்மார்ட்போனைத் தேடும் வாடிக்கையாளர்களுக்கு Realme Narzo 50i ஒரு சிறந்த தேர்வு ஆகும். ஆனால் அதிக ரேம் தேவைப்படும் பயனர்களுக்கு இது சிறந்த தேர்வாக இருக்காது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews