நேஷனல் கிரஷ் ராஷ்மிகாவின் சம்பளம் மட்டும் இத்தனை கோடியா? வாயை பிளக்கும் ரசிகர்கள்!

இந்திய அளவில் பிரபலமான நடிகைகளில் ஒருவராக இருப்பவர் ராஷ்மிகா மந்தனா. கன்னட திரை உலகில் க்ரிக் பார்ட்டி என்னும் திரைப்படத்தின் மூலம் அறிமுகமான அவரை தெலுங்கு திரையுலகம் கெட்டியாக பிடித்துக் கொண்டது. அங்கு அவர் நடித்த படங்கள் வரிசையாக ஹிட் அடிக்க ராஷ்மிகாவிற்கு தனியாக ரசிகர் கூட்டம் உருவாக துவங்கியது. அல்லு அர்ஜுன் உள்ளிட்ட முன்னணி ஹீரோக்களுடன் நடித்து பிரபலம் அடைந்தார். கீதா கோவிந்தம் படத்தின் மூலம் ராஷ்மிகா ரசிகர்களின் மனதில் அதிகமாக கொண்டாடப்பட்டாலும் அவரின் நடிப்பு திறமைக்கு உச்சமாக அமைந்த திரைப்படம் புஷ்பா. இந்த படத்தில் அவரின் நடிப்பு, பாடல் காட்சிகளுக்கு நடனம் ஆடிய விதம் முகபாவனை என அனைத்தும் அனைத்து தரப்பு ரசிகர்களாலும் பராட்டபட்டார் .

அதைத்தொடர்ந்து தமிழில் நடிகர் கார்த்திவுடன் இணைந்து 2021 ஆம் ஆண்டு சுல்தான் திரைப்படத்தில் நடித்திருப்பார். இந்த படத்தின் மூலம் கிடைத்த வெற்றியை தொடர்ந்து இந்த ஆண்டு தொடக்கத்தில் பொங்கலை முன்னிட்டு தளபதி விஜய் உடன் இணைந்து வாரிசு திரைப்படத்தில் நடித்திருந்தார். படம் முழுக்க விஜயுடன் அவர் இணைந்திருக்கும் ஒவ்வொரு காட்சிகளும் ரசிகர்களை மகிழ்வித்தது. மேலும் விஜய் உடன் இணைந்து நடனமாடும் பாடல் காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.

அடுத்தடுத்து முன்னணி இளம் ஹீரோக்களுடன் கைகோர்த்து படங்களில் நடித்து வரும் ராஷ்மிகா மந்தனா இந்திய அளவில் கவனிக்கப்படும் கதாநாயகிகளில் ஒருவராக மாறிவிட்டார். அந்த வகையில் அவர் தமிழ் கன்னடம் தெலுங்கு மொழிகளை கடந்து ஹிந்தியில் கடைசியாக ரன்பீர் கபருடன் அனிமல் படத்தில் நடித்திருக்கிறார். இதற்கு முன்னதாக அவர் மெசர்மென்ட் என்ற இந்தி படத்தில் நடித்திருந்தார் அந்த படம் டீசன்டான வரவேற்பை பெற்றது.

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பை பை சொல்லும் கமல்ஹாசன்.. நடுவராக களம் இறங்குகிறாரா நாட்டாமை சரத்குமார்?

அதேபோல் அனிமல் படமும் ஹிட் ஆகி ஹிந்தியில் தனக்கு ஒரு நிலையான இடம் மற்றும் பிரபலத்தை கொடுக்கும் என்று ராஷ்மிகா மிகப்பெரிய நம்பிக்கையில் இருந்தார். அனிமல் படம் சமீபத்தில் வெளியானது, அதனை சந்தீப் ரெட்டி வங்கா இயக்கியிருந்தார். கபூர் முதன்முறையாக தென் மாநில இயக்குனருடன் இணைந்து இருப்பதால் படத்துக்கு ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் படத்துக்கு கடுமையான விமர்சனமே கிடைத்திருக்கிறது. குறிப்பாக முகம் சுளிக்கும் ஆபாச காட்சிகளும், அதீத வன்முறை காட்சிகளும், அதிக கவர்ச்சியான படுக்கையறை காட்சிகளிலும் படங்களில் அதிகப்படியாக இடம் பெற்று இருந்தது.

இந்நிலையில் அனிமல் படத்தில் நடித்ததற்காக ராஸ்மிகா வாங்கிய சம்பளம் குறித்த தகவல் ஒன்று பரவலாக ஓடிக்கொண்டிருக்கிறது. அதாவது படத்தில் ஏராளமான கிளாமர் காட்சிகளும் முத்த காட்சிகளும் இருந்ததால் தன்னுடைய சம்பளத்தை 15 கோடி ரூபாயாக பிக் செய்து வாங்கிக் கொண்டதாக கூறப்படுகிறது. அதேசமயம் இந்த தகவல் எவ்வளவு உண்மை இருக்கிறது என்பதும் தெரியவில்லை. ஒருவேளை இது உண்மையாக இருக்கும் பட்சத்தில் ராஷ்மிகா தான் அதிக சம்பளம் வாங்கும் டாப் நடிகை என்பது குறிப்பிடத்தக்கது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.