கருப்பு எம்ஜிஆர் என கத்திய ரசிகர்கள்! லாரன்ஸ் கொடுத்த பதிலடி என்ன தெரியுமா?

தமிழ் சினிமாவில் ஆரம்ப காலங்களில் ஒரு குரூப் டான்ஸராக தனது சினிமா வாழ்க்கையை ஆரம்பித்து அதன் பிறகு நடன இயக்குனராக மாறி பின் நடிகராக இப்போது இயக்குனராகவும் அவதாரம் எடுத்திருப்பவர் நடிகர் லாரன்ஸ். தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கிலும் இவர் மிகப் பிரபலமான நடிகராகவே திகழ்ந்து வருகிறார்.

தெலுங்கில் பல முன்னணி நடிகர்களுக்கு நடனம் கற்றுக் கொடுத்தவராக இருந்திருக்கிறார் லாரன்ஸ். தற்போது லாரன்ஸ் மாற்றம் என்ற பெயரில் புதிய சேவை ஒன்றை ஆரம்பித்து அதன் மூலம் ஏழை எளிய மக்களுக்கு அவரால் முடிந்த அளவு பல நல்ல உதவிகளை செய்து வருகிறார்.

குறிப்பாக பொருளாதாரத்தை இழந்து வாடும் விவசாயிகளுக்கு ட்ராக்டர்கள் வழங்குவது அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்வது என ஊர் ஊராக சென்று அவர்களின் தேவையை பூர்த்தி செய்து வருகிறார் லாரன்ஸ். இப்படி தமிழ் சினிமாவில் எந்த ஒரு நடிகரும் இந்த அளவு அடுத்தடுத்து உதவிகளை செய்ததாக எந்த பத்திரிகைகளிலும் வரவில்லை.

ஆனால் லாரன்ஸ் பற்றி நாள்தோறும் சோசியல் மீடியாக்களில் செய்திகள் வந்த வண்ணம் இருக்கின்றன. இந்த நிலையில் ஒரு கிராமத்திற்கு சென்ற லாரன்ஸை வரவேற்று ஊர்மக்கள் அவருக்கு தேவையான வரவேற்புகளை கொடுத்தனர் .அப்போது சுற்றி இருந்த ரசிகர்கள் பலர் அவரை கருப்பு எம்.ஜி.ஆர் என அழைத்தனர்.

உடனே அவர்களுக்கு பதில் கூறும் விதமாக லாரன்ஸ் என்ன சொன்னார் தெரியுமா? என்னை கருப்பு எம்ஜிஆர் என புகழ்வதும் என்னைப் பற்றி பெருமையாக பேசுவதையும் நான் எப்போதுமே தலையில் ஏற்றிக்கொள்ள மாட்டேன். மனதில் மட்டுமே வைத்துக் கொள்வேன். அதுவும் நான் ஒரு சேவகன்.

சேவை செய்ய வந்தவன். அதற்காக கடவுள் என்னை அனுப்பி வைத்திருக்கிறார். அவருக்கு நான் எப்போதும் சேவை செய்து கொண்டு இருப்பேன் என லாரன்ஸ் இதைதெரிவித்தார்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...