இளையராஜா பயோபிக்ல மியூசிக் டைரக்டரே இல்லையா.. இந்திய சினிமா வரலாற்றில் நடக்க போகும் அற்புதம்..

தமிழ் சினிமாவில் சில திரைப்படங்கள் பற்றிய அறிவிப்பு வெளியாகும் நாளிலேயே மிகப்பெரிய அளவில் அதன் மீது எதிர்பார்ப்பு உருவாகும். அப்படி கடந்த மார்ச் மாதம் தனுஷ் நடிக்க இருக்கும் திரைப்படம் பற்றிய அறிவிப்பு வெளிவந்த நாள் முதலே அதன் மீதான எதிர்பார்ப்பு பல மடங்கு அதிகரிக்கத் தொடங்கிவிட்டது. இதற்கு மிக முக்கிய காரணம் இசைஞானி இளையராஜாவின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து எடுக்கப்படும் திரைப்படத்தில் தனுஷ் நாயகனாக நடிப்பது தான்.

ராக்கி, சாணிக்காயிதம் உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கியிருந்த அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் கேப்டன் மில்லர் என்ற திரைப்படத்தில் தனுஷ் நடித்திருந்தார். இந்த திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றிருந்த நிலையில் தான் மீண்டும் ஒரு திரைப்படத்தின் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் நடிக்க இருந்ததாகவும் தகவல்கள் வெளியானது.

அதன்படி இந்த திரைப்படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பும் கடந்த மார்ச் மாதம் வெளியாகியிருந்த நிலையில் உலக அளவில் தனது இசையால் பலரையும் மெய்சிலிர்க்க வைத்த இசைஞானி இளையராஜாவின் வாழ்க்கை வரலாற்று திரைப்படத்தில் தான் நடிக்க உள்ளார் என்றும் அறிவிப்பு வெளியானது.

இளையராஜா என்றும் இந்த படத்திற்கு பெயர் சூட்டப்பட்டிருந்த நிலையில் அவர் சினிமாவில் எத்தனை கஷ்டங்களை கடந்து முன்னணி இசையமைப்பாளராக மாறினார் என்பதை மையமாக வைத்து இந்த திரைப்படம் உருவாக்கப்பட உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி இருந்தது.

இன்னும் எத்தனை ஆண்டுகள் கழித்தாலும் இளையராஜாவின் இசை இல்லாமல் பலராலும் பொழுதை கழிக்க முடியாது என்ற ஒரு சூழலில் பேன் இந்தியன் திரைப்படமாக இளையராஜா படம் உருவாக இருப்பதால் தனுஷ் எப்படி அந்த கதாபாத்திரத்தை தனது நடிப்பின் மூலம் வெளிப்படுத்தப் போகிறார் என்பதை பார்க்கும் ஆவலும் ரசிகர்கள் மத்தியில் உருவாகி இருந்தது.

மேலும் இந்த படத்தின் திரைக்கதையை இளையராஜாவே எழுதியிருப்பதாகவும், கமல்ஹாசன் வசனங்கள் உள்ளிட்ட விஷயங்களில் கவனம் செலுத்த இருப்பதாகவும் தகவல்கள் வெளியான நிலையில் படத்தின் இசையமைப்பாளர் யார் என்பது மட்டும் தொடர்ந்து தெரியாமலே இருந்து வந்தது. இளையராஜா வாழ்க்கை வரலாற்றை தழுவி இந்த திரைப்படம் எடுக்க உள்ளதால் இளையராஜாவே இசை அமைக்கிறாரா அல்லது வேறு ஏதேனும் இசையமைப்பாளருக்கு வாய்ப்பு கிடைக்குமா என்று பல்வேறு கேள்விகளும் இருந்து வந்த நிலையில்தான் இதற்கான விடை பற்றி தகவல் ஒன்று வெளியாகி உள்ளது.

இந்திய சினிமா வரலாற்றிலேயே முதல் முறையாக இசையமைப்பாளர் யாரும் இல்லாமல் இளையராஜா திரைப்படம் உருவாகவுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அதுமட்டுமில்லாமல் இளையராஜா இசையமைப்பில் உருவான பாடல்கள் மற்றும் பின்னணி இசையை இந்த படம் முழுவதும் பயன்படுத்த உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளதால் எப்படி மிகப்பெரிய அளவில் சாத்தியமாகும் என்பதை பார்க்கும் ஆர்வமும் ரசிகர்களை தொற்றிக் கொண்டுள்ளது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...