தனுஷ் – ஐஸ்வர்யா பிரிவுக்கு காரணமான அந்த பிரபலம்! கடைசியின் வெளிச்சத்திற்கு வந்த உண்மை

தமிழ் சினிமாவில் கிட்டத்தட்ட 18 வருடங்களாக ஒரு நட்சத்திர தம்பதிகளாக வாழ்ந்து வந்தவர்கள் நடிகர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா. சமீப காலமாக இவர்களின் விவாகரத்து பிரச்சனை திரையுலகினர் மத்தியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

இருவரும் பிரியப்போவதாக நீதிமன்றத்தில் மறுமுறை ஈடு செய்திருக்கின்றனர். இந்த நிலையில் சில தினங்களாக பாடகியும் நடிகையுமான சுசித்ரா தனுஷை பற்றியும் இவருடைய முன்னாள் கணவர் பற்றியும் சில தகவல்களை பகிர்ந்து வருகிறார்.

அதில் தனுஷ் மற்றும் தன் முன்னாள் கணவர் கார்த்திக் குமார் இவர்களுடன் இணைந்து தனுஷின் மனைவி ஐஸ்வர்யா சேர்ந்து அடித்த அரட்டைகள் அவர்களுக்கு உண்டான நெருக்கம் பற்றிய விஷயங்கள் இவைகளை எல்லாம் ஒவ்வொன்றாக அந்த பேட்டியின் மூலம் கூறி வருகிறார். ஏற்கனவே சுச்சி லீக்ஸ் என்ற பெயரில் நடிகைகளின் அந்தரங்க புகைப்படங்கள் வீடியோக்கள் என வெளியாகி இவர் மீது ஒட்டுமொத்த திரையுலகமும் அதிருப்தியில் இருந்தது.

ஆனால் சுசித்ரா இதை நான் செய்யவில்லை. எனது அக்கவுண்ட்டை யாரோ ஹேக் செய்திருக்கிறார்கள் என்று கூறி வந்த நிலையில் இவரை பைத்தியம் என்று கூறி சினிமாவிலிருந்து ஒதுக்கி வைத்தனர். இருந்தாலும் மீண்டும் தன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டை பொய் என்று நிரூபிப்பதற்காக மறுபடியும் பேட்டி கொடுத்து வருகிறார். அதில் தனுஷும் தனது முன்னாள் கணவர் கார்த்திக் குமாரும் சேர்ந்து என்னென்ன வேலைகள் செய்தார்கள்? அவர்களுக்குள் நடக்கும் பார்ட்டிகள் நடிகைகளுடன் நெருக்கம் இவற்றைப் பற்றி ஒவ்வொன்றாக கூறி வருகிறார்.

அது மட்டுமல்லாமல் சுசி லீக்ஸ் மூலம் வெளியான புகைப்படங்கள் அத்தனையையும் திரிஷா தான் கொடுத்தார். ஆனால் கடைசியில் த்ரிஷாவே அந்த ட்விட்டரில் என்னைப் பற்றி தவறாக பேசியிருந்தது பெரும் அதிருப்தியை ஏற்படுத்தி இருந்தது என்றும் சுசித்ரா கூறி இருக்கிறார். அது மட்டுமல்லாமல் தனுஷால் நான் மிகவும் வேதனைப்பட்டு என் வாழ்க்கையும் கேள்விக்குறியானது.

ஆனால் இப்போது தனுஷின் வாழ்க்கை எந்த நிலைமைக்கு தள்ளப்பட்டு இருக்கிறது என்பது அனைவருக்குமே தெரியும். இருவரும் விவாகரத்து வரை சென்றிருக்கின்றனர். இது என்னுடைய சாபம் அல்ல. என்னுடைய பிரார்த்தனை என்று அந்த பேட்டியில் கூறி இருக்கிறார்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...