மண்வாசனை படத்தில் நடிக்க ஆசைப்பட்ட பாலையா! அதற்கு என்டி ராமராவ் என்ன சொன்னார் தெரியுமா?

தமிழில் பாரதிராஜாவின் இயக்கத்தில் வெளிவந்த ஒரு சூப்பர் ஹிட் திரைப்படம் என்றால் அது மண்வாசனை. அந்த படத்தில் கதாநாயகனாக நடிக்க நடிகர்களை தேடிக் கொண்டிருந்த சமயத்தில் அந்த பக்கம் வளையல் விற்கும் ஒரு வியாபாரியை நடிகனாக்கியவர் பாரதிராஜா.

அவர்தான் பாண்டியன். படம் வெளியாகி தமிழில் மாபெரும் வெற்றி பெற்றது. இந்த படத்தை தெலுங்கில் பாலகிருஷ்ணா பார்த்து அந்தப் படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நடிக்க வேண்டும் என ஆசைப்பட்டார். இதை தன்னுடைய தந்தையான என்டி ராமராவிடம் தெரிவித்தார்.

அப்போது ராமாராவ் தமிழில் இருக்கும் இந்த ஊரின் ட்ரெண்ட் வேறு மாதிரி இருக்கும். தெலுங்கில் வேற மாதிரியாக இருக்கும். இது சரி வராது எனக் கூற பாலகிருஷ்ணா எப்படியாவது நான் நடிக்க வேண்டும் எனக் கூற அதன் பிறகு ராமாராவ் அந்த படத்தை பார்த்திருக்கிறார் .

மண்வாசனை படத்தில் காந்திமதி நடித்த கதாபாத்திரத்தில் பானுமதி நடித்தால் நன்றாக இருக்கும் என பானுமதி இடமும் பேசி சம்மதிக்க வைத்திருக்கின்றனர். அதன்பிறகு படப்பிடிப்பு ஆரம்பிக்கும் போது என்டி ராமராவ் பாலகிருஷ்ணாவிடம் படப்பிடிப்பிற்கு போவது சரி. ஆனால் அந்தப் படத்தில் நடிக்கும் நடிகர் நடிகைகளுக்கு முன்பாகவே நீ அங்கு சென்று விட வேண்டும்.

அங்கு நின்று வரும் நடிகர்களின் கதவை திறந்து நீ வரவேற்க வேண்டும். அதேபோல படபிடிப்பு முடிந்து அனைவரும் போகும் போது நீ வழி அனுப்பி விட்டு தான் வீட்டிற்கு திரும்ப வேண்டும். இது இந்த படத்திற்கு மட்டுமல்ல நீ நடிகராக இருக்கும் வரை இந்த பழக்கத்தை நீ பின்பற்ற வேண்டும் என சொல்லி அனுப்பினாராம்.

அதைப்போலவே பானுமதி கார் படப்பிடிப்பிற்கு வந்ததும் பாலகிருஷ்ணா ஓடிப்போய் காரின் கதவை திறந்து விட்டாராம். அப்போது பானுமதி பாலகிருஷ்ணாவிடம் இதை செய்ய சொன்னது உன் அப்பாதானே எனக் கேட்டாராம். அது மட்டும் அல்லாமல் இந்த பழக்கம் இன்றைய தலைமுறைகளில் கிடையாது என்று சொல்லிவிட்டு படப்பிடிப்பிற்கு சென்றாராம்.

இதை பிரபல சித்ரா லட்சுமணன் ஒரு பேட்டியில் கூறும்போது இப்படிப்பட்ட ஒரு பழத்தை தன் மகனுக்காக சொல்லிக் கொடுத்தவர் என்டி ராமராவ். அதை அடுத்தடுத்த தலைமுறைகளிலும் அவருடைய வாரிசுகள் பின்பற்றி வருவதாகவும் அவர் கூறினார்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews