இளைஞர்களுக்கு சரத்குமார் சொன்ன சூப்பர் அட்வைஸ்…

சரத்குமார் ராமநாதன் என்ற இயற்பெயரைக் கொண்ட நடிகர் சரத்குமார் நடிகர், பத்திரிகையாளர், திரைப்பட தயாரிப்பாளர், அரசியல்வாதி மற்றும் முன்னாள் பாடி பில்டர் ஆவார். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் போன்ற மொழித் திரைப்படங்களில் நடித்துள்ளார்.

பாடி பில்டர் ஆக இருந்த சரத்குமார் அவர்கள் 1974 ஆம் ஆண்டு ‘மிஸ் மெட்ராஸ் யூனிவர்சிட்டி’ என்ற பட்டத்தை வென்றார். 1988 ஆம் ஆண்டு ‘கண் சிமிட்டும் நேரம்’ என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

1989 ஆம் ஆண்டு ‘புலன் விசாரணை’ என்ற திரைப்படத்தில் வில்லனாக நடித்தார். இப்படம் மாபெரும் வெற்றிப் பெற்று சரத்குமார் யார் என்று உலகுக்கு காட்டியது. மேலும் சிறந்த வில்லனுக்கான சினிமா எக்ஸ்பிரஸ் விருதை வென்றார். இதன் மூலம் பல பட வாய்ப்புகள் சரத்குமார் அவர்களைத் தேடி வந்தன.

இரட்டை வேடங்களில் சரத்குமார் நடித்த ‘நாட்டாமை’, ‘சூரியவம்சம்’ ஆகிய திரைப்படங்கள் பிளாக்பஸ்டர் ஹிட்டாகி சிறந்த நடிகருக்கான மாநில விருது மற்றும் பிலிம்பேர் விருதுகளை வென்றார் அதைத் தொடர்ந்து ‘சிம்மராசி’, .’கூலி’, ‘நாடோடி மன்னன்’ போன்ற பல வெற்றித் திரைப்படங்களில் நடித்தவர் சரத்குமார்.

தற்போது சமத்துவ மக்கள் கட்சி என்ற கட்சியை நிறுவி அதில் பயணித்துக் கொண்டே குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார் சரத்குமார். ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தில் இவரது நடிப்பு பாராட்டுக்குரியதாய் இருந்தது.

தற்போது நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்துக் கொண்ட சரத்குமார், இளைஞர்ளுக்கான சூப்பரான அட்வைஸ் ஒன்றை வழங்கியுள்ளார். அவர் கூறியது என்னவென்றால், இன்றைய இளைஞர்கள் இந்த வேலையை இவர் தான் செய்யணும், அந்த வேலையை அவர் தான் செய்யணும் அப்படினு நெனச்சா வாழ்க்கையில முன்னுக்கு வர முடியாது. நான் ஆரம்பத்தில் பேப்பர் போடும் வேலை செய்தேன், சைக்கிள் மெக்கானிக் ஆக இருந்திருக்கிறேன், ரிப்போர்ட்டர் ஆக வேலை செய்துள்ளேன்.

எந்த வேலையும் செய்யலாம் என்ற ஊக்கம் இருந்தால் எளிதாக முன்னுக்கு வரலாம். எந்த வேலையையும் இழிவாக நினைக்க கூடாது, டேபிள் துடைக்கும் வேலையாக இருந்தாலும் கூட நம் பொருளாதார உயர்வுக்கு உதவுகிறது என்றால் தாராளமாக செய்யலாம். நேர்மையாக நியாயமாக கடின உழைப்போடு செய்யும் எந்த வேலையாக இருந்தாலும் அது சிறப்பானது தான். இதுதான் என்னுடைய தாராக மந்திரம். இதை கடைப்பிடித்தால் இளைஞர்கள் கண்டிப்பாக வாழ்க்கையின் அடுத்த கட்டத்திற்கு செல்ல முடியும் என்று கூறியுள்ளார் சரத்குமார்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews