‘லால் சலாம்’ படப்பிடிப்பை முடித்த ரஜினிகாந்த்! மேஜிக் அப்பா என புகழ்ந்த மகள் ஐஸ்வர்யா!

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் கிட்டத்தட்ட 5 ஆண்டுகளுக்குப் பிறகு ‘லால் சலாம்’ படத்தின் மூலம் இயக்கத்திற்கு திரும்பியுள்ளார். இப்படத்தில் விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். ஐஸ்வர்யாவின் தந்தையும் சூப்பர் ஸ்டாருமான ரஜினிகாந்த் இப்படத்தில் கேமியோவில் நடித்துள்ளார்.

லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு ஏஆர் ரஹ்மான் இசையமைக்கிறார். ஐஸ்வர்யா ரஜினிகாந்த் ‘லால் சலாம்’ படத்தின் மூலம் மீண்டும் இயக்குனர் நாற்காலிக்கு வந்தது ரசிகர்களின் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை மே மாதம் வெளியிடப்பட்டது. இப்படத்தில் மொய்தீன் பாய் கதாபாத்திரத்தில் தலைவர் நடிக்கிறார். தற்போது படத்தின் படப்பிடிப்பை முடித்துவிட்டார் சூப்பர் ஸ்டார் என தகவல் வெளியாகியுள்ளது.

Rajinikanth completes 'Lal Salaam' shoot.

தற்போழுது ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தனது தந்தை ரஜினிகாந்த் மற்றும் ‘லால் சலாம்’ குழுவினருடன் ஒரு புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். அவரது பதிவில், “உங்களுடன் ஒரு திரைப்படம் தயாரிப்பது ஒரு அதிசயம் மற்றும் நீங்கள் ஒரு மேஜிக் அப்பா..  என்று குறிப்பிட்டிருந்தார்.

ஆசையாக வந்த விஜய் ரசிகர்கள்.. கோபத்துடன் துரத்தி அடித்த நிர்வாகி!

முன்னதாக, ரஜினிகாந்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரைப் பகிர்ந்துகொண்ட ஐஸ்வர்யா, “மொய்தீன்பாய்… வருக!…  என்றும் பதிவிட்டிருந்தார் .

தமிழகம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் படத்தின் படப்பிடிப்புகள் நடத்தப்பட்டது. மேலும் படத்தின் தொழில்நுட்பக் குழுவில் ஒளிப்பதிவாளர் விஷ்ணு ரங்கசாமி மற்றும் எடிட்டர் பிரவின் பாஸ்கர் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...