டீசன்ட்டாக ஒதுங்கிய விஜய்.. தில்லாக நடித்து மாஸ் ஹிட் கொடுத்த விஷால்.. எந்தப் படம் தெரியுமா?

தமிழ் சினிமாவில் மென்மையான காதல், குடும்ப, சென்டிமெண்ட் கதைகளைக் கொடுத்து தனக்கென தனி பாணியைக் கடைப்பிடித்து இயக்கிய அத்தனை படங்களையும் வெற்றிப் படமாகக் கொடுத்தவர் இயக்குநர் விக்ரமன். இவரிடம் உதவியாளராகப் பணியாற்றி பின் கடந்த 2001-ல் தனது குருநாதரைப் போலவே குடும்பப் பாங்கான கதையைக் கையில் எடுத்து சூப்பர் ஹிட் படத்தைக் கொடுத்தவர் இயக்குநர் லிங்குசாமி.

ஆனந்தம் படம் தமிழ் சினிமா ரசிகர்களிடம் மட்டுமல்லாது குடும்பங்கள் கொண்டாடும் வெற்றிப் படமாகவும் அமைந்தது. இதனையடுத்து ரன் படம் மூலம் ஆக்சன், காதல் பார்முலாவைக் கையில் எடுத்து விறுவிறுப்பான திரைக்கதை, விவேக்கின் எவர்கீரீன் காமெடி என பக்கா கமர்ஷியல் படத்தைக் கொடுத்து அதனையும் வெற்றிப்படமாக்கினார். அதன்பிறகு அஜீத்தை வைத்து ஜி படத்தினை இயக்கிவர் அந்தப் படத்தில் சற்று சிறு சறுக்கலைச் சந்தித்தார்.

எனினும் அதற்கு அடுத்து அவர் இயக்கிய மாஸ் ஹிட்படமான சண்டக்கோழி படம் விஷாலுக்கு பெரிய திருப்புமுனையைக் கொடுத்தது. சண்டக் கோழி படத்தில் விஷாலுக்கு முன்னர் கமிட் ஆனவர் யார் தெரியுமா? தளபதி விஜய்தான்.

ஒரே ஒரு ஆட்டோகிராஃப்-ஆல் மாறிப்போன வாழ்க்கை.. மாதம்பட்டி ரங்கராஜுக்கு ரோல் மாடலான நெப்போலியன்

லிங்குசாமி சண்டக் கோழி படத்தின் கதையைச் சொன்னபோது முதலில் ஆர்வத்துடன் கேட்டவர் ராஜ்கிரண் வரும் காட்சிகளைக் கூறியவுடன் படத்தில் தனக்கு முக்கியத்துவம் குறைந்து விடும் என எண்ணி இண்டர்வெல் போர்ஷன் வரை கேட்டு பின் வேண்டாம் என்றிருக்கிறார். லிங்குசாமி இடைவேளைக்குப் பிறகு பிந்தைய காட்சிகளை சொல்லலாம் என்றிருக்கையில் தனக்கு இந்தக் கதை செட் ஆகாது என விஜய் ஒதுக்கியிருக்கிறார்.

அதன்பின்னர் இந்தக் கதை விஷாலிடம் சொல்ல பின் அவர் நடித்தார். படம் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றது. விஷாலை பட்டிதொட்டியெங்கும் சண்டக் கோழி படம் சென்றடைய வைத்தது. அதனைத் தொடர்ந்து சண்டக்கோழி 2 விலும் இந்தக் கூட்டணி தொடர்ந்தது குறிப்பிடத்தக்கது. மேலும் இயக்குநர் லிங்குசாமி சண்டக் கோழி படத்திற்குப் பிறகு பீமா, அஞ்சான், வேட்டை, பையா போன்ற சூப்பர் ஹிட் படங்களை இயக்கினார்.

மேலும் தனது சகோதரர்களுடன் இணைந்து திருப்பதி பிரதர்ஸ் தயாரிப்பு நிறுவனம் சார்பில் சில திரைப்படங்களையும் தயாரித்துள்ளார்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...