தலைநகரம் படத்தில் சுந்தர். சியையே ஏமாற்றி இயக்குனர் சுராஜ் பாத்த பயங்கரமான வேலை..

இயக்குனராக தனது திரைப்பயணத்தில் மேட்டுக்குடி தொடங்கி அன்பே சிவம் வரைக்கும் பல்வேறு சூப்பர் ஹிட் படங்களை இயக்கியவர் சுந்தர் சி. தற்போதும் அவர் தொடர்ந்து இயக்குனராக பல சூப்பர் ஹிட் படங்களை இயக்கி வரும் அதே வேளையில் நாயகனாகவும் இன்னொரு பக்கம் நிறைய படங்களில் நடித்து வருகிறார்.

அதிலும் அவர் இயக்கும் அரண்மனை உள்ளிட்ட பல படங்களில் அவரே நாயகனாகவும் நடித்து அசர வைத்திருந்த நிலையில், இயக்கம் மற்றும் நடிப்பு என இரண்டிலும் சிக்ஸர் அடித்து பட்டையை கிளப்பி வருகிறார் சுந்தர் சி. இப்படி நடிப்பிலும் சுந்தர் சி பட்டையை கிளப்பி வருவதற்கு முக்கிய காரணமாக அமைந்த திரைப்படம் தான் தலைநகரம்.

சுந்தர். சி நாயகனாக நடித்த முதல் திரைப்படத்தை அவரது அசிஸ்டன்ட் இயக்குனரான பிரபல இயக்குனர் சுராஜ் இயக்கி இருந்தார். இந்த திரைப்படம் ஆக்ஷன் கதையம்சம் கொண்ட அதே வேளையில் வடிவேலுவின் நாய் சேகர் கதாபாத்திரத்தில் அவர் செய்த அலப்பறை காமெடிகள் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றிருந்தது.

அதுமட்டுமில்லாமல் வடிவேலுவின் திரை பயணத்தில் மிக முக்கியமான கேரக்டரில் ஒன்றாகவும் இந்த நாய் சேகர் கதாபாத்திரம் தற்போது வரை பார்க்கப்பட்டும் வருகிறது. மேலும் இந்த தலைநகரம் திரைப்படம் மலையாளத்தில் வெளியான அபிமன்யு என்ற திரைப்படத்தின் ரீமேக் ஆகும். இந்நிலையில் இந்த திரைப்படம் ரீமேக் என்பதே தனக்கு தெரியாது என சமீபத்தில் நேர்காணலில் தெரிவித்துள்ளார் சுந்தர்சி.

“தலைநகரம் ரீமேக் என்பது எனக்கு பல வருடமாக தெரியாது. நீங்க சொன்னா நம்பமாட்டீங்க. சுராஜோட திறமை அது. என்னுடைய 92 வயது அம்மா, ஒரு வருடத்திற்கு முன் நீ நடிச்ச மோகன்லால் படம் போட்டிருக்கிறார்கள் என கூறினார். நான் அப்போது தலைநகரம் ரீமேக் இல்லை என்றதும், அந்த படத்தில் உள்ள காட்சி எல்லாம் அப்படியே வருகிறது என அம்மா கூறினார்.

அதன் பின்னர் தான் எனக்கே அதிர்ச்சியாக இருந்தது. ரீமேக் என்பது கூட தெரியாமல் கதை விவாதத்தில் உட்கார்ந்து கொண்டிருந்தேன். அம்மா சொன்ன பிறகு, அந்த மலையாள படத்தின் கதையை இணையத்தில் படித்த போது அப்படியே தலைநகரம் கதை போல இருந்தது. உண்மை தெரிந்த பின் சுராஜிடம் கேட்டு என்ன செய்வது. இதில் காமெடி என்னவென்றால் தமிழ் படத்தின் ரைட்ஸ் வாங்கி தெலுங்கில் தலைநகரம் படத்தை ரீமேக் செய்திருந்தார்கள்” என சுந்தர். சி கூறினார்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...