சுவாதியிடம் பொய் சொல்லி நடிக்க வைத்த சசிக்குமார்.. சுப்ரமணியபுரம் படத்துக்குப் பின்னால இப்படி ஓர் சம்பவமா?

இயக்குநர் அமீரிடம் மௌனம் பேசியதே, பருத்தி வீரன் ஆகிய படங்களில் உதவி இயக்குநராகப் பணியாற்றி பின்னர் சுப்ரமணியபுரம் படத்தின் மூலம் இயக்குநர், தயாரிப்பளார், நடிகர் அவதாரம் எடுத்தவர் தான் சசிக்குமார். நட்புக்கு முக்கியத்துவம் கொடுத்து படங்களை இயக்கும் இயக்குநர்களில் சசிக்குமார் முக்கியமானவர். பெரும்பாலும் அவரது படங்கள் அனைத்தும் நட்பை மையப்படுத்தியே இருக்கும். மேலும் தமிழ் சினிமாவில் முதன் முதலாக அரிவாள், வெட்டு, மதுரைக் கதைக்களம் போன்றவற்றைக் கொண்டுவந்ததும் சசிக்குமார் தான்.

இவர் இயக்கிய சுப்ரமணியபுரம் படத்தில் நட்பு, காதல், துரோகம் என அனைத்தும் நிறைந்திருக்கும். கடந்த 2008-ல் வெளியான இந்தப்படம் தமிழ் சினிமாவில் புதிய கலாச்சாரத்தைக் கொண்டு வந்தது. இந்தப் படத்தில் நடிப்பதற்காக ஹீரோவைத் தேடும் போது அப்போது சென்னை 600028 படம் வெளியாகி ஓடிக் கொண்டிருந்தது.

மதுரைக்காரரான சசிக்குமார் அப்போது இந்தப் படத்தின் போஸ்டரை கவனித்துள்ளார். அந்தப் போஸ்டரில் ஜெய், சிவா, பிரேம்ஜி, நிதின்சத்யா உள்ளிட்ட 12 பேர் கொண்ட கொண்ட நண்பர்கள் போஸ்டரில் தனக்கான நாயகனைத் தேடியிருக்கிறார் அப்போது ஜெய் முகம் சுப்ரமணியபுரம் கதைக்கு ஒத்துவர, அவரை அணுகி அவரிடம் நிறைய முடி, தாடி வளர்த்து வரச் சொல்லியிருக்கிறார்.

டீசன்ட்டாக ஒதுங்கிய விஜய்.. தில்லாக நடித்து மாஸ் ஹிட் கொடுத்த விஷால்.. எந்தப் படம் தெரியுமா?

ஜெய் அவ்வாறு வந்தபோது அது சசிக்குமாருக்கு பிடித்துப் போக அவரையே ஹீரோவாக்கினார். மேலும் ஹீரோயினாக அப்போது செல்வராகவன் இயக்கிய யாரடி நீ மோகினி படத்தின் தெலுங்குப் படமான ஆடவாரி மாதாலகு ஆர்தாலு வேருலே படத்தில் திரிஷாவின் தங்கையாக நடித்த சுவாதியை அணுகியிருக்கிறார். அப்போது சுவாதி இந்தப் படத்தில் கிளைமேக்ஸ் சோகமானதா அல்லது சந்தோஷமாக முடிவதா என்று கேட்டிருக்கிறார். அப்போது சசிக்குமார் சந்தோஷமான கிளைமேக்ஸ்தான் என்று கூறி அவரை நடிக்க வைத்திருக்கிறார்.

மேலும் ஜெய், சுவாதி ஜோடிக்கு முதன் முதலாக கண்கள் இரண்டால் பாடலையும் போட்டுக் காட்ட இருவரது கெமிஸ்ட்ரியும் நன்கு ஒர்க்அவுட் ஆகியிருக்கிறது. அதன்பின் கிளைமேக்ஸ் காட்சியை எடுக்கும் போது சசிக்குமார், ஜெய் இருவரும் இறப்பது போல் காட்சியை எடுக்க அதனைக் கண்டு சுவாதி என்னிடம் சந்தோஷமான கிளைமேக்ஸ் என்று கூறீனீர்களே என வாக்குவாதத்தில் ஈடுபட்டார். பின்னர் சசிக்குமார் அவரை சமாதானப்படுத்தி நடிக்க வைத்தார். சுப்ரமணியபுரம் சுவாதிக்கும், ஜெய்க்கும் திருப்பு முனையைக் கொடுத்தது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...