இரவு 11 மணிக்கு ஏ.ஆர்.ரஹ்மானிடமிருந்து வந்த போன்.. உன்னிமேனன் குரலை உலகமே வியந்த அந்த தருணம்..

கேரளாவின் கோவில் நகரமான குருவாயூரில் பிறந்த உன்னிமேனன் முறைப்படி சங்கீதம் பயின்று மலையாளத்தில் பக்திப் பாடல்களைப் பாடி வந்தார். இவரது குரலைக் கேட்ட இளையராஜா ‘ஒரு கைதியின் டைரி’ படத்தில் முதன் முதலாக ‘பொன்மானே கோபம் ஏனோ..’ என்ற பாடல் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகம் செய்தார். இந்தப் பாடல் சூப்பர் ஹிட் ஆனாலும் தொடர்ந்து இளையராஜா உன்னிமேனனுக்கு வாய்ப்புகள் வழங்கவில்லை.

அதன்பின் ஏ.ஆர்.ரஹ்மான் தனது முதல்படமான ரோஜாவில் உன்னிமேனனை பயன்படுத்தினார். ஏற்கனவே ஏ.ஆர்.ரஹ்மானின் தந்தை உன்னிமேனனின் பக்திப் பாடல்களுக்கு இசையமைத்திருந்தால் அவரை நன்கு தெரியும். மேலும் ரஹ்மானும் கீபோர்டு வாசிக்கும் போது ஏ.ஆர்.ரஹ்மானையும் நன்கு அறிந்திருக்கிறார்.

ஒருநாள் இரவு 11 அன்று திடீரென உன்னிமேனனுக்கு போன் செய்திருக்கிறார் ஏ.ஆர்.ரஹ்மான். நாளை உங்களது குரலில் ஒரு பாடலைப் பதிவு செய்யவேண்டும் என்றும், இந்தப் பாடலில் தான் தயாரிப்பாளருக்கும், இயக்குநர் மணிரத்னத்திற்கும் பிடித்திருந்தால் மட்டுமே படத்தில் இடம்பெறும் என்றும், இந்தப் பாடல் இடம்பெறவில்லை என்றால் இருவருக்குமே வேலை இல்லை என்றும் கூறியிருக்கிறார்.

சுவாதியிடம் பொய் சொல்லி நடிக்க வைத்த சசிக்குமார்.. சுப்ரமணியபுரம் படத்துக்குப் பின்னால இப்படி ஓர் சம்பவமா?

அதன்படி ஏ.ஆர்.ரஹ்மான் வழக்கப்படி நடுஇரவில் பாடல் பதிவைத் தொடங்க, அப்போது வைரமுத்துவும், மணிரத்னமும் உடன் இருந்திருக்கின்றனர். ஏ.ஆர்.ரஹ்மான் கம்போசிங்கை ஆரம்பிக்க உன்னிமேனன் குரலும், சுஜாதாவின் குரலும் “புது வெள்ளை மழை இங்கு பொழிகின்றது..” எனப் பாட ஆரம்பிக்க சிறப்பாகப் பாடல் பதிவு முடிந்தது. அதன்பின் நாட்கள் சென்றன. ஒருவழியாக ரோஜா படம் வெளிவந்தது. முதல் படமே ரஹ்மானுக்கு தேசிய விருதைத் தர ஒட்டுமொத்த சினிமா உலகமும் ஏ.ஆர்.ரஹ்மானை வியந்து பார்த்தது. அப்போது அவருக்கு வயது 22 தான் ஆகியிருந்தது.

இந்நிலையில் கச்சேரிக்காக வெளிநாடு சென்றிருந்த உன்னிமேனனுக்கு ஓர் போன் வந்திருக்கிறது.எதிர்முனையில் பேசியவர் நீங்கள் பாடிய பாடல் ரோஜாவில் பிரமாதமாக வந்துள்ளது. புதுவித இசை உணர்வைக் கொடுக்கிறது என்று பாராட்டிப் பேச அப்போதுதான் உன்னிமேனனுக்கு நாம ஜெயிச்சிட்டோம் மாறா என்று மார்தட்டிக் கொண்டு தொடர்ந்து ரஹ்மானின் இசையில் பாட ஆரம்பித்தார்.

ஏ.ஆர். ரஹ்மான்-உன்னிமேனன் கூட்டணியில் வந்த பாடல்கள் அனைத்துமே சூப்பர் ஹிட் ஆனது. அவற்றில் பூங்காற்றிலே உன் சுவாசத்தை.., கண்ணுக்கு மை அழகு.., போறாளே பொன்னுத்தாயி.., என்ன விலை அழகே, மானாமதுரை மாமரக்கிளையிலே, தாண்டியா ஆட்டம் ஆட..,நதியே நதியே காதல் நதியே…, போன்ற பல பாடல்கள் இன்றும் இசை ரசிகர்கள் பிளே லிஸ்ட்டில் இடம்பெற்றிருக்கிறது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...