சத்தமில்லாமல் பேக்கடித்த சந்தானம்!.. “இங்க நான் தான் கிங்கு” இந்த வாரம் ரிலீஸ் இல்ல பாஸ்!..

கடந்த வாரம் வெளியான அரண்மனை 4 திரைப்படம் இந்த வாரமும் திரையரங்குகளில் மிகப்பெரிய வசூல் வேட்டையை நடத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், கவின் நடித்துள்ள ஸ்டார் திரைப்படம் இந்த வாரம் வெளியாக உள்ள நிலையில், அதற்கு போட்டியாக வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட சந்தானத்தின் இங்க நான் தான் கிங்கு திரைப்படம் இந்த வாரம் வெளியாகவில்லை என்கிற அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தள்ளிப்போன சந்தானம் படம்:

சந்தானம் நடிப்பில் இந்த ஆண்டு வெளியான வடக்குப்பட்டி ராமசாமி திரைப்படம் பிப்ரவரி மாதம் ரிலீஸ் ஆனது. படம் காமெடியாக நல்லா இருந்தாலும் வசூலில் சுமாராகவே ஓடியது. நஷ்டம் அடையாமல் ஓரளவுக்கு லாபத்தை ஈட்டி தயாரிப்பாளரை தப்பிக்க வைத்தது அந்த படம்.

இந்நிலையில் சந்தானம் நடிப்பில் ஆனந்த் நாராயணன் இயக்கத்தில் உருவாக்கியுள்ள இங்க நான் தான் கிங்கு திரைப்படம் மே 10 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில், கவினின் ஸ்டார் படத்துடன் மோதுகிறதா என்ற கேள்விகள் எழுந்தன.

குறிப்பாக கவினின் ஸ்டார் படம் மே 10 ஆம் தேதி ரிலீஸ் என்கிற அறிவிப்பை வெளியிட்ட பின்னர்தான் சத்தானம் தனது படத்தின் அறிவிப்பை வெளியிட்டு இருந்தார். ஆனால், தற்போது கடைசி நேரத்தில் படத்தின் ரிலீஸ் தேதியை மே 17-ஆம் தேதிக்கு மாற்றிவிட்டார்.

அன்புச்செழியன் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த படம் காமெடி கலாட்டாவாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அரண்மனை 4 மற்றும் இந்த வாரம் வெளியாக உள்ள ஸ்டார் திரைப்படங்கள் பாக்ஸ் ஆபிசை நிரப்பி விட்டால் தனது படம் காணாமல் போய்விடும் என்பதை உணர்ந்த சந்தானம் தற்போது படத்தை ரிலீஸ் தேதியை தள்ளி வைத்திருப்பதாக கூறுகின்றனர்.

கவின் படத்தால் பயந்துட்டாரா?:

சந்தானம் இந்த வாரம் கவினுக்கு போட்டியாக தனது படத்தை வெளியிடவில்லை என்றாலும் அர்ஜுன் தாஸ் நடித்துள்ள ரசவாதி மற்றும் அமீர் நடித்துள்ள உயிர் தமிழுக்கு உள்ளிட்ட படங்களில் இந்த வாரம் வெளியாகின்றன. அரண்மனை 4 மற்றும் கவினின் ஸ்டார் படங்கள் இந்த வாரம் கல்லா கட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...