ஆங்கிலக் கவிதையை தமிழில் ஹிட் பாடலாக்கிய கண்ணதாசன்.. இப்படி ஒரு மொழிப் புலமையா?

கவியரசர் கண்ணதாசனைப் பற்றி எத்தனையோ சுவாரஸ்யமான தகவல்களைக் கூறிக்கொண்டே செல்லலாம். தான் இயற்றிய ஒவ்வொரு பாட்டிற்கும் பின்னால் ஒரு சிறு சண்டையோ அல்லது அவரது அனுபவங்களோ அல்லது மனதில் எங்கோ எப்போதோ படித்த தகவல்கள், செவி வழித்தகவல்கள் என அனைத்தையும் பாடலாக்கி ரசிக்க வைத்தவர்.

இப்படி கண்ணதாசன் ஆலயமணி படத்திற்காக எழுதிய “தூக்கம் உன் கண்களைத் தழுவட்டுமே.. அமைதி உன் நெஞ்சில் நிலவட்டுமே..” என்ற பாடலுக்குப் பின் ஒரு சுவராஸ்ய சம்பவம் இருக்கிறது. ஒருமுறை கண்ணதாசன் தனக்கு வழக்கு விஷயமாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராகப் பணிபுரிந்த வி.பி.ராமன் என்பவரை அடிக்கடி சந்திப்பது வழக்கம். அந்த வழக்கறிஞர் மிகவும் திறமைசாலி.

மேலும் வழக்கறிஞரின் மனைவியும் நன்கு படித்தவர். ஆங்கில மொழிப்புலமை கொண்டவர். இவ்வாறு கண்ணதாசன் வழக்கறிஞரைச் சந்திக்கச் சென்றபோது கதவு மூடியிருந்தது. அப்போது அவரின் மனைவி Who is that ? என்று ஆங்கிலத்தில் கேட்டுள்ளார். அப்போது கண்ணதாசன் சற்றும் யோசிக்காமல், An Outstanding poet is standing out என்று பதில் கொடுக்க வழக்கறிஞரின் மனைவி கண்ணதாசனின் ஆங்கில மொழிப் புலமையை எண்ணி வியந்தாராம்.

‘எந்தப் பெண்ணிலும் இல்லாத ஒன்று..’ ‘பூவே உன்னை நேசித்தேன்..’ இந்தப் ஹிட் பாட்டெல்லாம் இவரோட இசையா?

மேலும் அவர் தான் படித்த ஆங்கில மொழிக் கவிதையின் இரண்டு வரிகளை கண்ணதாசனிடம் கூறியுள்ளார். அக்கவிதையில் Sleep Your Eyes.. Rest Your Heart என்று போரிலிருந்து திரும்பிய ராணுவ வீரன் மீண்டும் போர்க்களத்தை நினைத்து தூங்காமல் அங்குமிங்கும் நடக்கும் போது அவன் மனைவி அவனைப் பார்த்துக் கூறுவதாக அமைந்திருக்கும்.

இந்த வரிகளை தன் மனதில் நிறுத்திய கண்ணதாசன் 1964ல் கே.சங்கர் இயக்கத்தில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன், எஸ்.எஸ்.ஆர். சரோஜாதேவி, விஜயகுமாரி நடிப்பில் வெளிவந்த புகழ்பெற்ற ஹிட் பாடலான தூக்கம் உன் கண்களைத் தழுவட்டுமே.. அமைதி உன் நெஞ்சில் நிலவட்டுமே என்று வழக்கறிஞரின் மனைவி கூறிய ஆங்கிலக் கவிதையின் இரண்டு வரிகளை மொழிபெயர்த்து சூப்பர் ஹிட் பாடலாக மாற்றினார். இந்தப் பாடலை எஸ்.ஜானகி பாடியிருப்பார். விஸ்வநாதன் ராமமூர்த்தி இசையமைத்திருப்பர்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews