‘எந்தப் பெண்ணிலும் இல்லாத ஒன்று..’ ‘பூவே உன்னை நேசித்தேன்..’ இந்தப் ஹிட் பாட்டெல்லாம் இவரோட இசையா?

1990-களில் தமிழ்த் திரையுலகில் இளையராஜாவின் ஆதிக்கமே அதிகம் இருந்தது. பல ஹிட் பாடல்களின் இசையமைப்பாளர் இளையராஜாவே என்று நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் சில ஹிட் பாடல்களை நாம் கேட்கும் போது அந்தப் பாடலுக்கான இசையை வேறொரு இசையமைப்பாளரே இசையமைத்திருப்பார். அந்தப் பாடல்கள் மிகப்பெரும் அளவில் ஹிட் ஆகி இன்றுவரை அவர்களை ஞாபகப்படுத்திக் கொண்டிருக்கும். இப்படி தமிழ் சினிமாவில் சில ஹிட் பாடல்களைக் கொடுத்து அசத்தியவர்தான் ஹம்சலேகா.

கர்நாடாகவின் மாண்டியா மாவட்டத்தைச் சேர்ந்த ஹம்சலேகாவினை தமிழ் திரையிசை ரசிகர்கள் அவ்வளவாக அறிந்திருக்க வாய்ப்பில்லை. ஆனால் கன்னட தேசத்து மக்கள் இவரைக் கொண்டாடினர். ஏனெனில் கன்னடப் படங்களில் அதிகம் இசையமைத்தவர்தான் ஹம்சலேகா.

சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருது, கர்நாடக அரசின் விருதுகள், பிலிம்பேர் விருதுகள் என சாண்டல்வுட்டின் தவிர்க்க முடியாத சினிமா பிரபலமாக வலம் வருகிறார். இசைமட்டுமல்லாமல் பாடல்கள் இயற்றுவது, திரைக்கதை எழுதுவது, கதைகள் எழுதுவது போன்றவற்றிலும் ஈடுபட்டு வருகிறார். தமிழில் பல பிரபலமான பாடல்கள் இவர் இசையமைத்தது தான். குறிப்பாக ரஜினிக்கு ‘கொடி பறக்குது’ படம் இவர் இசையமைத்ததுதான். இந்தப் படத்தில் இடம்பெற்ற ‘சேலைகட்டும் பெண்ணுக்கொரு வாசமுண்டு.., ‘ஓ காதல் என்னை காதலித்ததே..’ போன்ற ஹிட் பாடல்களைக் கொடுத்தார்.

முதல் இரு அண்ணன்களை இழந்த சிவாஜி கணேசன்..யாரும் அறியாத நடிகர் திலகம் குடும்பத்தின் மறுபக்கம்

அதேபோன்று குஷ்புவுக்கு எவர்கிரீன் ஹிட் பாடலாக கேப்டன் மகள் திரைப்படத்தில் இடம்பெற்ற ‘எந்தப் பெண்ணிலும் இல்லாத ஒன்று… ஏதோ.. அது ஏதோ.. ’ பாடல் ஹம்சலேகா இசையமைத்தது தான். இவற்றைத் தவிர பருவராகம் என்ற படத்தில் கல்லூரி கால லூட்டி பாடல்களுக்கு அச்சாராமாக விளங்கிய “பூவே உன்னை நேசித்தேன்.. பூக்கள் கொண்டு பூசித்தேன்..” என்ற 80‘s ஹிட் பாடலும் ஹம்சலேகாவின் இசையில் பிறந்ததே. இப்படி கன்னட சினிமாவில் கலக்கியவர், தமிழ் சினிமாவிற்கும் காலத்தால் அழியாத பல தேன் போன்ற பாடல்களைக் கொடுத்திருக்கிறார்.

இவரைப் போன்று பல ஹிட் பாடல்களைக் கொடுத்தும் சரியாகக் கொண்டாடப் படாமல் தமிழ் திரையுலகில் பல இசையமைப்பாளர்கள் இருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் அவர்கள் இசையமைத்த பாடல்கள் என்றென்றும் அவர்களுக்கு புகழைக் கொடுக்கும்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...