அக்கா கூட நடிச்சா அப்படி கூப்பிடலாமா? நகுலை எச்சரித்த அஜித்.. இதான் மேட்டரா?

தமிழ் சினிமாவில் ஒரு வளரும் நடிகராக இருப்பவர் நகுல். பாய்ஸ் திரைப்படத்தின் மூலம் சங்கரால் அறிமுகமான நகுல் அந்தப் படத்தில் ஒரு குண்டான இள வயது இளைஞனாக நடித்திருப்பார். அந்த படத்தில் நகுல் ரசிகர்களை மிகவும் கவர்ந்த வண்ணம் குண்டான உடல் எடையுடன் நன்றாக நடனமும் ஆடியிருப்பார். அதிலிருந்து 5 வருடம் நகுலை எந்த ஒரு திரைப்படத்திலும் பார்க்க முடியவில்லை.

அதன் பிறகு ‘காதலில் விழுந்தேன்’ என்ற படத்தின் மூலம் கதாநாயகனாக முதன் முதலில் அறிமுகமானார். அந்தப் படத்தில் பார்க்கும்போது கூட இவர் பாய்ஸ் படத்தில் நடித்தவர் தானா என்ற சந்தேகம் அனைவருக்குமே எழுந்தது. ஏனெனில் அந்த அளவுக்கு உடலை இளைத்து பார்ப்பதற்கே ஹேண்ட்ஸமான லுக்கில் தோன்றியிருப்பார். இதை இன்றுவரை பின்பற்றி வருகிறார்.

மேலும் 90களில் கனவு கன்னியாக இருந்த தேவயானியின் தம்பியும் கூட. காதலில் விழுந்தேன் திரைப்படத்தின் கதைக்களம் அனைவரையுமே கவர்ந்தது. அதிலிருந்து மாசிலாமணி போன்ற ஒரு சில படங்களில் நடித்து வந்த நகுலுக்கு அவர் எதிர்பார்த்த வாய்ப்பு சரிவர அமையவில்லை. இருந்தாலும் தொடர்ந்து தனக்கான வாய்ப்பை தேடிக் கொண்டுதான் இருக்கிறார்.

இந்த நிலையில் நகுலின் ஒரு பேட்டி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது. அவர் அந்த பேட்டியில் அஜித்தை பற்றி ஒரு சூப்பரான தகவல் ஒன்றை கூறி இருக்கிறார். தேவயானி உடன் அஜித் தொடரும் மற்றும் காதல் கோட்டை போன்ற இரண்டு திரைப்படங்களில் நடித்திருக்கிறார். அதனால் அஜித்துடன் நெருங்கி பழகும் வாய்ப்பு நகுலுக்கும் கிடைத்திருக்கிறது.

மேலும் முதன் முதலில் அஜித்தை பார்க்கும் போது ‘ஹாய் அண்ணா’ என அழைத்தாராம். உடனே அஜித் ‘டோண்ட் கால் மி அண்ணா, ஜஸ்ட் கால் அஜித்’ எனக் கூறியிருக்கிறார். இதை பற்றி கூறும்போது எப்படி நான் அவரை அஜித் என அழைப்பேன். இருந்தாலும் அண்ணா என்று தான் கூப்பிட்டேன் என கூறினார். மேலும் தேவயானி வீட்டுக்கு அஜித் வரும்போது எல்லாம் அவருடைய அப்பாவை சந்தித்து பேசுவது வழக்கமாம்.

அஜித் பட்ட கஷ்டங்கள் போராட்டங்கள் என எல்லாவற்றையும் தேவயானியின் அப்பாவிடம் ஷேர் செய்வாராம். அது மட்டும் அல்லாமல் அஜித் இயற்கையிலேயே எதையும் உடனே நுகரும் தன்மை கொண்டவராம். என்ன ஸ்மெல் வந்தாலும் அது என்ன என்பதை சரியாக சொல்லி விடுவாராம் . மேலும் எதையும் முகத்துக்கு எதிராக சொல்லக் கூடியவர் என்றும் பக்கா ஜென்டில்மேன் என்றும் நகுல் அந்த பேட்டியில் அஜித்தை பற்றி கூறியிருக்கிறார்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...