Poco மாடல்களை தள்ளுபடி விலையில் அள்ளித்தரும் பிளிப்கார்ட்.. முழு விவரங்கள் இதோ..!

உலகின் முன்னணி ஸ்மார்ட்போன் உற்பத்தி நிறுவனமான சியாமி நிறுவனத்தின் துணை நிறுவனமான Poco நிறுவனம் சமீபத்தில் பல புதிய மாடல்களை அறிமுகப்படுத்தியுள்ளது என்பதும் அந்த மாடல்களுக்கு வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது என்பதும் தெரிந்ததே. இந்த நிலையில் Poco மாடல்களை ஜூன் 10 முதல் பிளிப்கார்ட்டில் சலுகை விலையில் பெறலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்த விவரங்களை தற்போது பார்ப்போம்

பிளிப்கார்ட் பிளஸ் உறுப்பினர்களுக்காக இந்தியாவில் ஜூன் 10 ஜூன் 14 வரை Poco ஸ்மார்ட்போன்கள் தள்ளுபடி விலையில் கிடைக்கும். Poco F5, Poco X5 Pro 5G ஆகிய ஸ்மார்ட்போன்கள் கேஷ்பேக் மற்றும் தள்ளுபடி விலையில் பிளிப்கார்டில் கிடைக்கின்றன. மேலும் Poco X5 5G, Poco M5, Poco C55, Poco C51 மற்றும் Poco C50 ஆகிய மாடல்களின் விலையும் குறைந்துள்ளது.

பிளிப்கார்ட் பிக் சேவிங் டேஸ் விற்பனையின் போது, Poco F5 மாடலின் விலை ரூ. 26,999 ஆகும். இந்த மாடலின் ஒரிஜினல் விலையில் இருந்து ரூ.3000 தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. அதேபோல், Poco X5 Pro 5G மாடலின் விலை ரூ. 21,999 என கிடைக்கும். இதன் ஒரிஜினல் விலை ரூ. 22,999 ஆகும். மேலும் HDFC, ICICI மற்றும் SBI வங்கி கார்டுகளைப் பயன்படுத்தி வாங்கினால் ரூ.1,000 தள்ளுபடி கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் Poco X5 5G மாடலின் விலை ரூ.15,999க்கு கிடைக்கும். இதன் ஒரிஜினல் விலை ரூ. 18,999 ஆகும். மேலும் Poco C51 மற்றும் Poco C50 ஆகிய மாடல்களின் விலை ரூ. 6,999 மற்றும் ரூ. 5,649.= கிடைக்கும்.

மேற்கூறிய Poco மாடல் ஸ்மார்ட்போன்களை வாங்கும் போது கூடுதல் தள்ளுபடிகளைப் பெற பழைய ஸ்மார்ட்போன்களை மாற்றிக் கொள்ளலாம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews