கமல், ரஜினி படங்களுக்கு மறுப்பு.. அரசியல்வாதியின் இம்சை.. பெப்சி உமா வாழ்க்கையில் இவ்வளவு சோகமா?

பெப்சி உமா என்றால் 90ஸ் கிட்ஸ்களுக்கு தெரியாமல் இருக்க முடியாது என்பதும் அந்த கால இளைஞர்களின் கனவு கன்னியாக இருந்தார் என்பது தெரிந்ததே.

பொதுவாக திரையுலக நடிகைகள் மட்டுமே கனவு கன்னியாக இருந்த நிலையில் முதல்முறையாக ஒரு தொலைக்காட்சி தொகுப்பாளினி கனவு கன்னியாக இருந்த சாதனை பெப்சி உமாவுக்கு மட்டுமே உண்டு என்றும் அதன் பின்னர் இன்றளவும் கூட அவருடைய புகழை வேறு எந்த தொகுப்பாளினியும் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஆரம்பத்தில் சன் டிவியின் பெப்சி உங்கள் சாய்ஸ் என்ற நிகழ்ச்சியை உமா தொகுத்து வழங்கினார். அதன் பிறகு அவரது பெயரே பெப்சி உமா என்று மாறிவிட்டது. இந்த நிகழ்ச்சி முதல் மூன்று எபிசோடுகள் மிகவும் சுமாராக வரவேற்பு பெற்ற நிலையில் இந்த நிகழ்ச்சியை தூக்கி விடலாமா என சன் டிவி நிர்வாகம் யோசித்த நிலையில் தான் நான்காவது எபிசோடில் இருந்து சூப்பர் ஹிட் ஆகியது.

pepsi uma

பெப்சி உங்கள் சாய்ஸ் எப்போது வரும் என்று இளைஞர்கள் காத்திருந்தனர் என்பதும் குறிப்பாக பெண்கள் பெப்சி உமா என்ன கலர் சேலை அணிந்திருக்கிறார்? என்ன வளையல் போட்டிருக்கிறார்? என்றெல்லாம் கவனிக்க ஆரம்பித்து விட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதனை அடுத்து பல எபிசோடுகள் அந்த நிகழ்ச்சி சூப்பர் ஹிட் ஆனது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் புகழின் உச்சத்தில் இருந்தபோது அவருக்கு சினிமா வாய்ப்புகளும் கிடைத்தது. முதல் முறையாக பாரதிராஜா இயக்கத்தில் அவரது மகன் மனோஜ் நடித்த ’தாஜ்மஹால்’ திரைப்படத்தில் நாயகியாக நடிக்க அவருக்கு வாய்ப்பு கிடைத்தது. ஆனால் அவர் சினிமாவில் நடிக்க விரும்பவில்லை என்று கூறிவிட்டார்.

ஒருவேளை புது முகத்துடன் நடிக்க விரும்பவில்லை என்ற காரணமும் அப்போது கூறப்பட்டது. ஆனால் கமல்ஹாசன் தனது ’அன்பே சிவம்’ படத்திற்கு கிரண் கேரக்டரில் நடிக்க முதலில் பெப்சி உமாவை தான் முதலில் அணுகியதாகவும் ஆனால் கமல்ஹாசனுக்கே அவர் மறுப்பு தெரிவித்ததாகவும் இதனால் கமல்ஹாசன் மிகுந்த வருத்தம் அடைந்ததாகவும் கூறப்பட்டது.

இதனை அடுத்து நிகழ்ந்த நிகழ்வு தான் ஹைலைட். ரஜினிகாந்த் நடிப்பில் உருவான அருணாச்சலம் திரைப்படத்தில் ரம்பா கேரக்டரில் நடிக்க பெப்சி உமாவை அணுகினர். இதற்காக ரஜினியே பெப்சி உமாவுக்கு போன் செய்து அழைத்த போது ’நான் உங்களுடைய தீவிர ரசிகர், ஆனால் எனக்கு சினிமாவில் நடிக்க துளியும் விருப்பமில்லை, தயவு செய்து மன்னித்து விடுங்கள்’ என பணிவுடன் மறுப்பு தெரிவித்ததாகவும் கூறப்பட்டது. அப்போது ரஜினி எவ்வளவோ அவரிடம் பேசி அவரை கன்வின்ஸ் செய்ய முயன்ற போதிலும் சினிமாவில் நடிக்க தனக்கு விருப்பமில்லை என்பதில் அவர் உறுதியாக இருந்ததாகவும் கூறப்பட்டது.

ஆன்ட்டியால் அழிந்தாரா நடிகர் கரண்? சினிமாவே வேண்டாம் என அமெரிக்காவில் செட்டில்..!

அதுமட்டுமின்றி அவரை திருமணம் செய்ய பல கோடீஸ்வரர்கள் முயற்சி செய்ததாகவும் ஆனால் யாரையும் அவர் நெருங்கவிடவில்லை என்றும் கூறப்படுவது உண்டு. சினிமாவில் அவர் நடிக்க விரும்பாததற்கு ஒரே காரணம் நடிகைகளுக்கு பாலியல் தொல்லை ஏற்படும் என்பதுதான் என்றும் அதனால் தான் அவர் சினிமாவில் நடிக்கவில்லை என்று கூறப்பட்டது.

இதனை அடுத்து பிரபல அரசியல்வாதி ஒருவர் அவரை அடைய நினைத்து மிரட்டியதாகவும் ஒரு கட்டத்தில் இதற்கு மேல் நீங்கள் தொந்தரவு கொடுத்தால் மீடியாவை நேரடியாக சந்தித்து உங்கள் பெயரை சொல்லி விடுவேன் என்று கூறியதை அடுத்து அந்த அரசியல்வாதி ஒதுங்கியதாகவும் கூறப்பட்டது.

இந்த நிலையில் தான் சன் டிவியில் இருந்து விலகி ஜெயா டிவியில் நிகழ்ச்சியை அவர் நடத்தினார். ஆனால் அந்த நிகழ்ச்சிக்கு மிகப்பெரிய அளவில் வரவேற்பு கிடைக்கவில்லை என்பது மட்டுமின்றி ஒரு பிரபல நடிகருடன் கிசுகிசு கிளம்பியது.

அதனால் விரக்தியின் உச்சத்திற்கு சென்ற பெப்சி உமா டிவியும் வேண்டாம் சினிமாவும் வேண்டாம் என்று முழுமையாக ஒதுங்கி திருமணம் செய்து கொண்டு கணவரின் பிசினஸில் செட்டில் ஆகிவிட்டார்.

சமீபத்தில் கூட அவர் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது இந்த நிகழ்ச்சியில் அவர் பேசியது மிகப்பெரிய அளவில் ஊடகங்களில் செய்திகள் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.

இப்போதும் தொலைக்காட்சி நிகழ்ச்சியை தொகுத்து வழங்க தயார் என்றும் ஆனால் எனது நிபந்தனைகளுக்கு அந்த தொலைக்காட்சி ஒப்புக்கொள்ள வேண்டும் என்றும் கூறியதாக செய்திகள் வெளியாகி உள்ளன. மீண்டும் பெப்சி உமா தொலைக்காட்சிக்கு வருவாரா? 90களின் கிட்ஸ்களை கவர்ந்தது போல் 2கே கிட்ஸ்களையும் கவர்வாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...