திருமண வரன் அமையாமல் தள்ளிக்கொண்டே போகிறதா? பங்குனி உத்திரத்தன்று இதை மறக்காம செய்யுங்க..!

சிலருக்கு வயது ஏறிக்கொண்டே போகும். திருமண வரன் அமையாது. அவர்களுக்கு ஆண்டுகள் கடந்து வயது ஏற ஏற உள்ளுக்குள் ஒரு பயம் வந்து விடும். நமக்கு திருமணம் நடக்காமலே போய்விடுமோ என்று. பருவத்தே பயிர் செய் என்று தான் நம் முன்னோர்கள் சொல்லி இருக்கிறார்கள். ஆனால் இவர்களுக்கோ உரிய காலத்தில் பல்வேறு சிக்கல்கள் வந்து விடுகின்றன.

உதாரணமாக பொருளாதார சிக்கல், சகோதரிகளின் திருமணம், பெற்றோரின் உடல்நிலை என இவர்கள் பல சவால்களை சந்திக்க வேண்டியுள்ளது. வயதானதும் இருவருக்கும் ஏற்ற வயது, படிப்புத் தகுதி, வேலை அமைந்தாலும் ஜாதகத்தால் தடைபட்டுக் கொண்டே போகிறது.

இதற்காகப் பல்வேறு பரிகாரங்கள் செய்த போதும் பணம் தான் விரயமாகிறதே தவிர ஒன்றுமே நடக்க மாட்டேங்குறதே என அங்கலாய்ப்பு தான் வருகிறது. இவர்களின் குறையைப் போக்கும் வகையில் ஆன்மிகத்தில் ஒரு வழி சொல்லப்பட்டுள்ளது. இது பலருக்கும் நடந்த அனுபவப்பூர்வமான உண்மை என்பதால் நம்புபவர்கள் இந்த வழிபாட்டை மேற்கொள்ளலாம். என்னவென்று பார்ப்போமா…

வாழ்க்கையில் நமக்கான தேவைகளை உள்ளன்போடு முருகப்பெருமானிடம் வேண்டுங்கள். நாம் கேட்டதை கொடுக்கக்கூடியவர் கந்தக்கடவுள். அவர் நமக்கு சொந்தக்கடவுள். திருமணத்திற்காகக் காத்திருப்பவர்களுக்கு நல்ல வரனை நிச்சயமாக எம்பெருமான் கொடுப்பார்.

Panguni Uthra
Panguni Uthra

இல்லறம் நல்லறமாக இருக்க வேண்டும். கணவன் மனைவி வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்க வேண்டும். குழந்தைப் பேறு வேணும். நல்ல வரன் அமையணும். பக்கத்தில் உள்ள சிவன் கோவில் அல்லது முருகப்பெருமான் கோவிலில் பள்ளியறை பூஜை நடக்கிறதா என்று கேட்டுக்கொள்ளுங்கள்.

ஒவ்வொரு நாளும் இரவில் ஆலயங்களில் நடைபெறக்கூடிய பள்ளியறை பூஜைக்கு என்று தனித்துவமான மகத்துவம் உள்ளது. இந்தப் பங்குனி உத்திர திருநாளில் இரவு முருகப்பெருமான் அல்லது சிவன் கோவிலில் நடைபெறும் பள்ளியறை பூஜையில் கலந்து கொள்ளுங்கள். வாய்ப்பு இருக்கிறவர்கள் கொஞ்சம் பால், பழம், பூ வாங்கிக் கொடுங்கள். எது உங்களால் கொடுக்க முடியுமோ அதை அந்த பூஜைக்குக் கொடுங்கள்.

இதையும் படிங்க…பங்குனி உத்திரம் வரலாறு, முக்கியத்துவம், குலதெய்வ வழிபாடு மற்றும் சிறப்பம்சங்கள்…

உள்ளம் உருகி எனக்கு நல்ல வாழ்க்கைத் துணை அமைய வேண்டும். அல்லது எனக்கு அமைந்த வாழ்க்கைத் துணையுடன் நல்ல வாழ்க்கை அமைய வேண்டும். இல்லறத்தில் பிரச்சனை எதுவும் இல்லாமல் நல்லபடியாக இருக்க வேண்டும். அழகான என் குடும்பம் நல்லா இருக்க வேண்டும். அடுத்த ஆண்டுக்குள் நிச்சயமாக நல்ல வரன் கிடைத்து உங்கள் வேண்டுதல்படி திருமணம் நடக்கும்.

பலருக்கும் இது அனுபவப்பூர்வமாக நடந்த உண்மை. வாய்ப்பு உள்ளவர்கள் பங்குனி உத்திரத்தன்று நடக்கும் இந்தப் பள்ளியறை பூஜையில் கலந்து கொண்டு வேண்டுங்கள். வாய்ப்பு இல்லாதவர்கள் மற்றொரு நாளில் இந்தப் பள்ளியறை பூஜையில் கலந்து கொண்டு பிரார்த்தனை செய்து பலன் பெறுங்கள்.

மேற்கண்ட தகவலை பிரபல ஆன்மிக சொற்பொழிவாளர் தேச மங்கையர்க்கரசி தெரிவித்துள்ளார்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews