எஸ்.எஸ்.ராஜமெளலி விளம்பரம் செய்த OPPO Reno 10 சீரீஸ்.. இந்தியாவில் இன்று வெளியீடு..!

பிரம்மாண்ட இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமெளலி விளம்பரம் செய்து மிகப்பெரிய அளவில் வைரலான OPPO Reno 10 சீரீஸ் ஸ்மார்ட் போன் இன்று இந்தியாவில் வெளியுள்ள நிலையில் அந்த போனுக்கு முதல் நாளே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.

மேலும் இந்த போன் குறித்த ஹேஷ்டேக் டிவிட்டரில் ட்ரெண்ட் ஆகி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இந்த போனின் விலை மற்றும் சிறப்பம்சங்கள் குறித்து தற்போது பார்ப்போம்.

OPPO Reno 10 சீரிஸ் இந்தியாவில் மூன்று மாடல்களில் வெளியாகியுள்ளது. அது Reno 10, Reno 10 Pro மற்றும் Reno 10 Pro+ ஆகும். இந்த மாடல்களின் முழு விவரங்கள் இதோ:

Reno 10

* 6.7-இன்ச் AMOLED டிஸ்ப்ளே
* MediaTek Dimensity 7050 பிராசசர்
* 6ஜிபி/8ஜிபி ரேம்
* 128ஜிபி/256ஜிபி ஸ்டோரெஜ்
* 64MP பிரதான கேமரா, 32MP அல்ட்ராவைடு கேமரா, 8MP மேக்ரோ கேமரா
* 32 எம்.பி செல்பி கேமரா
* 4600mAh உடன் 80W ஃபாஸ்ட் சார்ஜிங் பேட்டரி
* ColorOS 13.1 உடன் Android 13 ஓஎஸ்
* விலை ரூ.38,999 (6ஜிபி/128ஜிபி), ரூ.42,999 (8ஜிபி/256ஜிபி

Reno 10 Pro

* 6.7-இன்ச் AMOLED டிஸ்ப்ளே
* MediaTek Dimensity 9000 பிராசசர்
* 6ஜிபி/8ஜிபி ரேம்
* 128ஜிபி/256ஜிபி ஸ்டோரெஜ்
* 50MP பிரதான கேமரா, 32MP அல்ட்ராவைடு கேமரா, 8MP மேக்ரோ கேமரா
* 32 எம்.பி செல்பி கேமரா
* 4600mAh உடன் 80W ஃபாஸ்ட் சார்ஜிங் பேட்டரி
* ColorOS 13.1 உடன் Android 13 ஓஎஸ்
* விலை: ரூ44,999 (6ஜிபி/128ஜிபி), ரூ.49,999 (8ஜிபி/256ஜிபி

Reno 10 Pro+

* 6.7-இன்ச் AMOLED டிஸ்ப்ளே
* Qualcomm Snapdragon 8+ Gen 1 பிராசசர்
* 8 ஜிபி/12 ஜிபி ரேம்
* 256 ஜிபி ஸ்டோரெஜ்
* 50MP பிரதான கேமரா, 8MP அல்ட்ராவைடு கேமரா, 2MP மேக்ரோ கேமரா
* 32 எம்.பி செல்பி கேமரா
* 100W ஃபாஸ்ட் சார்ஜிங் உடன் 4700mAh பேட்டரி
* ColorOS 13.1 உடன் Android 13 ஓஎஸ்
* விலை: ரூ.59,999 (8ஜிபி/256ஜிபி), ரூ.64,999 (12ஜிபி/256ஜிபி)

OPPO Reno 10 சீரிஸ் ஸ்மார்ட்போன் ஒரு சக்திவாய்ந்த பிராசசர், நல்ல கேமரா மற்றும் நீண்ட கால பேட்டரி கொண்டது என்பதால் விலை அதிகம் என்றாலும் தரமான ஸ்மார்ட்போனை தேடுபவர்களுக்கு ஒரு நல்ல தேர்வாகும்.

ஓப்போ, ஸ்மார்ட்போன், விலை,

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews