இந்தியாவில் ஜூலையில் வெளியாகும் Oppo Reno 10 ஸ்மார்ட்போன்.. வாங்கலாமா? என்ன சிறப்பம்சம்?

ஸ்மார்ட் போன் தயாரிப்பில் முன்னணி நிறுவனங்களில் ஒன்றான Oppo பல மாடல்களை அவ்வப்போது வெளியிட்டு வரும் நிலையில் வரும் ஜூலையில் புதிய மாடல் ஒன்றை வெளியிட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த புதிய ஸ்மார்ட்போன் குறித்த விபரங்களை தற்போது பார்ப்போம்.

Oppo நிறுவனம் Oppo Reno 10 சீரிஸ் என்ற ஸ்மார்ட்போன்களை வரும் ஜூலை இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ரெனோ 10, ரெனோ 10 ப்ரோ மற்றும் ரெனோ 10 ப்ரோ+ ஆகிய மூன்று மாடல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. Oppo Reno 10 சீரிஸ் 2023 மே மாதம் சீனாவில் அறிமுகப்படுத்தப்பட்ட நிலையில் அங்கு இந்த மாடல் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

Reno 10 ஸ்மார்ட்போன் MediaTek Dimensity 7050 SoC பிராஸசர் மூலம் இயக்கப்படுகிறது. மேலும் Reno 10 Pro மற்றும் Reno 10 Pro+ ஆகியவை MediaTek Dimensity 8200 SoCகளால் இயக்கப்படுகின்றன என கூறப்படுகிறாது.

மூன்று மாடல்களிலும் 6.62-இன்ச் AMOLED டிஸ்ப்ளேக்கள் முழு HD+ தெளிவுத்திறன் மற்றும் 120Hz அம்சங்களை கொண்டுள்ளன. கேமிராக்களை பொருத்டவரை 50 மெகாபிக்சல் டிரிபிள் கேமரா கொண்டிருக்கும் என்றும் 32 மெகாபிக்சல் செல்பி கேமராவைக் கொண்டுள்ளன என்றும் கூறப்படுகிறது.

Oppo Reno 10 சீரிஸ் இந்தியாவில் என்ன விலை என்பது குறித்த அதிகாரபூர்வ தகவல் வெளியாகவில்லை என்றாலும், Reno 10 சுமார் ரூ. 25,000, Reno 10 Pro சுமார் ரூ. 30,000, Reno 10 Pro+ சுமார் ரூ. 35,000 இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews