ஜூலையில் வெளியாகும் Oppo Reno 10 5G ஸ்மார்ட்போன்.. விலை இவ்வளவா?

ஓப்போ நிறுவனம் ஜூலையில் ஒரு புதிய மாடல் ஸ்மார்ட்போனை வெளியிட இருக்கும் நிலையில் இந்த ஸ்மார்ட்போனின் விலை சுமார் ரூ.45 ஆயிரம் இருக்கும் என்று கூறப்படுவது பயனர்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. ரூ.45 ஆயிரம் கொடுக்கும் அளவுக்கு அப்படி என்ன சிறப்பு அம்சங்கள் அந்த ஸ்மார்ட்போனில் உள்ளது என்பதை தற்போது பார்ப்போம்.

Oppo Reno 10 5G இந்தியாவில் ஜூலை இரண்டாவது வாரத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் மூன்று மாடல்களில் வரவிருப்பதாகவும், அவை Oppo Reno 10, Reno 10 Pro மற்றும் Reno 10 Pro+ என்று கூறப்படுகிறது.

Oppo Reno 10 ஸ்மார்ட்போன் MediaTek Dimensity 7050 SoC பிராஸசரால் இயக்கப்படுவதாகவும், Reno 10 Pro மற்றும் Reno 10 Pro+ ஆகியவை முறையே MediaTek Dimensity 8200 SoC மற்றும் Snapdragon 8+ Gen 1 SoC பிராஸசரால் இயக்கப்படும் என்று கூறப்படுகிறது. மேலும் இந்த மாடலின் இந்திய வகைகளில் ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (ஓஐஎஸ்) கொண்ட 64எம்பி பின்புற கேமராவும் இருப்பதாக கூறப்படுகிறது.

விலையைப் பொறுத்தவரை, Oppo Reno 10 மாடலின் விலை சுமார் ரூ. 29,000 என்றும், Oppo Reno 10 Pro மாடலின் விலை சுமார் ரூ. 35,000 என்றும், மற்றும் Reno 10 Pro+ மாடலின் விலை சுமார் ரூ. 45,000.

மேலும் இந்த மாடல் ஸ்மார்ட்போன்களை இந்தியாவில் Flipkart மூலம் வாங்குவதற்கு சலுகையும் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Oppo Reno 10 5G ஸ்மார்ட்போனின் சில முக்கிய விவரங்கள் இதோ:

* MediaTek Dimensity 7050 SoC (Reno 10), MediaTek Dimensity 8200 SoC (Reno 10 Pro), Snapdragon 8+ Gen 1 SoC (Reno 10 Pro+) பிராஸசர்

* 6.4 இன்ச் AMOLED டிஸ்ப்ளே

* OIS உடன் 64MP பின்புற கேமரா

* 16MP செல்பி கேமரா

* 8ஜிபி/12ஜிபி ரேம்

* 128ஜிபி/256ஜிபி இண்டர்னல் ஸ்டோரேஜ்

* 4500mAh பேட்டரி

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews