மெட்ராஸ் பாஷையின் நாயகன் லூஸ் மோகன்… இப்படித்தான் இந்தப் பெயர் இவருக்கு வந்ததா?

தமிழ் சினிமாவில் இயல்பிலேயே வட்டார வழக்கு மொழியில் பேசி நடிப்பவர்கள் வெகு சிலரே. ஒவ்வொரு நடிகர்களும் தங்கள் படத்தின் கதையைப் பொறுத்து  அந்த ஊர் வட்டார வழக்கில் பேசி நடிப்பது வழக்கம். ஆனால் இயல்பிலேயே எப்பொழுதும் சென்னைத் தமிழில் பேசி காமெடியில் ரசிகர்களைக் கவர்ந்தவர் நடிகர் லூஸ் மோகன்.

இப்போது உள்ள இமான் அண்ணாச்சி இயல்பாகவே திருநெல்வேலி வட்டார வழக்கில் நடிப்பது போன்று சென்னைத் தமிழில் பேசி சினிமா மொழியில் தனக்கென தனி இடத்தைப் பெற்றவர்.

காஞ்சிபுரத்தைச் சொந்த ஊராகக் கொண்ட லூஸ் மோகனின் தந்தையும் ஒரு நாடக நடிகராவார். தந்தையின் தொழில் மீதும், நாடகத்தின் மீதான மோகமும் இவரையும் நாடகம் மற்றும் சினிமா உலகில் நுழைத்தது. இவரின் தந்தை ஆறுமுகம் லூஸ் அண்ட் டைப் என்ற நாடகத்தில் நடித்து புகழ் பெற்றதால் லூஸ் ஆறுமுகம் என்று பெயர் பெற்றார். பின்னாளில் இவரது மகன் மோகனசுந்தரம் என்ற மோகனுக்கும் மக்கள் லூஸ் என்ற அடைமொழியைக் கொடுத்து லூஸ் மோகனாக்கினர்.

6 மொழிகள், 2000 படங்கள்… நடிகைகளின் அசர வைக்கும் குரலுக்கு சொந்தக்காரர் இவர்தான்!

கிட்டத்தட்ட 1000 படங்கள், நாடகங்களுக்கு மேல் நடித்துள்ளார் லூஸ் மோகன். இவரின் ஒல்லியான தேகமும், மெட்ராஸ் பாஷையும், உருண்ட கண்களும், உதறி உதறிப் பேசும் இவரின் நடையும் சினிமா வட்டாரத்தில் இவருக்கு தனி முகவரியைக் கொடுத்தது. எம்.ஜி.ஆர், சிவாஜிக்கு முன்னரே 1944-ல் அப்போதைய சூப்பர் ஸ்டார் பி.யூ சின்னப்பாவுடன்  ஹரிச்சந்திரா படம் மூலம்  திரையுலகில் அடியெடுத்து வைத்தார்.

தொடர்ந்து பல படங்களில் நடித்தாலும் 80-களுக்குப் பிறகுதான் புகழ் பெற்றார். இவர் நடித்த ரோசாப்பூ ரவிக்கைக்காரி படத்தில் தனது காமெடி முத்திரையைப் பதித்திருப்பார். தொடர்ந்து ரஜினி, கமல் என அனைத்து முன்னணி நட்சத்திரங்களுடன் பல படங்களில் நடித்தார்.

கடைசியாக தங்கர் பச்சானின் அழகி படத்தில் நடித்தார். அதுவே அவரது கடைசிப் படமாக அமைந்து விட்டது. முன்னணி காமெடி நடிகராக வரவேண்டியவர் அனைத்து படங்களிலும் ஒரு சில காட்சிகளிலே வந்தார். எனினும் தான் நடித்த படங்களில் சென்னை பாஷையை இவரை விட்டால் வேறுயாரும் தனித்துவமாகப் பேசி நடிக்க முடியாது என்னும் அளவிற்கு முத்திரை பதித்து இறுதியில் வறுமையால் வாடி தனது 84-ம் வயதில் உயிர் நீத்தார்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...