ரூ.2000 இருந்தால் போதும் Nothing Phone 2 ஸ்மார்ட்போனை முன்பதிவு செய்யலாம்.. முழு விவரங்கள்..!

இந்தியாவில் நத்திங் Nothing Phone 2 ஜூலை 11ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் இந்த ஸ்மார்ட் போனை பிளிப்கார்ட் மூலம் இப்பொழுதே முன் பதிவு செய்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ரூபாய் 2000 செலுத்தி முன்பதிவு செய்து கொள்ளலாம் என்றும் ஒருவேளை உங்களுக்கு Nothing Phone 2 கிடைக்கவில்லை என்றால் முன்பணம் திரும்ப செலுத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜூன் 29ஆம் தேதி முதல் பிளிப்கார்ட் தளத்தில் முன்பதிவு செய்து கொள்ளலாம் என்றும் 2000 ரூபாய் முன்பதிவு செலுத்தி வேறு சில சலுகைகள் ஏதும் பெற்றுக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் முன்னணி வங்கிகள் இந்த போனை வாங்குவதற்கு கேஷ் பேக் சலுகைகள் தருகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்தியாவின் Nothing Phone 2 ஜூலை 11ஆம் தேதி அதிகாரபூர்வமாக வெளியாக இருக்கும் நிலையில் இந்த ஃபோனை வாங்க விரும்பும் வாடிக்கையாளர்கள் நாளை மறுநாள் முதல் முன்பதிவு செய்து கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

நத்திங் ஃபோன் 2-ஐ முன்கூட்டிய ஆர்டர் செய்ய, நீங்கள் Flipkart இல் ஒரு கணக்கை உருவாக்கி, INR 2,000-ஐத் திரும்பப்பெறக்கூடிய டெபாசிட் செய்ய வேண்டும். நீங்கள் முன்கூட்டிய ஆர்டர் செய்ய விரும்பும் தொலைபேசியின் மாறுபாட்டை நீங்கள் தேர்ந்தெடுக்கலாம். ஜூலை 11 அன்று தொலைபேசி அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தப்பட்டதும், உங்கள் ஆர்டரை இறுதி செய்ய ஜூலை 20 வரை உங்களுக்கு அவகாசம் கிடைக்கும்.

நத்திங் ஃபோன் 2 இந்தியாவில் சுமார் 40,000 ரூபாய் என்ற விலையில் விற்பனையாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மாடல் ஸ்மார்ட்போன் Qualcomm Snapdragon 8+ Gen 1 SoC பிராஸசர் மூலம் இயக்கப்படும். மேலும் 120Hz அம்சத்துடன் 6.55-இன்ச் OLED டிஸ்ப்ளே கொண்டிருக்கும். தொலைபேசியின் பின்புறம் இரட்டை கேமரா அமைப்பு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews