ரூ.999க்கு Nothing Phone 1 கிடைக்கிறதா? பிளிப்கார்ட் சலுகை அறிவிப்பு..!

இந்தியாவில் ஜூலை 11ஆம் தேதி நத்திங் போன் 2 வெளியாக இருக்கும் நிலையில் இந்த போனுக்கான முன்பதிவு ஜூன் 29ஆம் தேதி தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் நத்திங் போன் 1 ப்ளிப்கார்ட்டில் வெறும் 999 ரூபாய்க்கு கிடைக்கும் என்ற தகவல் பயனாளர்கள் மத்தியில் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்த முழுமையான தகவல்களை தற்போது பார்ப்போம்

நத்திங் ஃபோன் (1) ஃபிளிப்கார்ட்டில் பெரும் தள்ளுபடியில் கிடைக்கிறது என்றும், அதாவது இந்த போன் ரூ.39,000 தள்ளுபடிக்குப் பிறகு பிளிப்கார்ட்டில் வெறும் ரூ.999க்கு கிடைக்கிறது என்றும் கூறப்படுகிறது.

நத்திங் ஃபோன் 1 இந்தியாவில் அதிக விற்பனை செய்து சாதனை செய்த நிலையில் இந்த போன் தற்போது ரூ.32.890 என விற்பனையாகி வருகிறது. இந்த நிலையில் பிளிப்கார்ட்டில் வெறும் ரூ.999க்கு கிடைக்கிறது என்றால் அதன் விவரங்களை தற்போது பார்ப்போம்.

256ஜிபி இண்டர்னல் ஸ்டோரேஜ் கொண்ட நத்திங் ஃபோன் 1 தற்போது ரூ.9,000 தள்ளுபடிக்குப் பிறகு பிளிப்கார்ட்டில் ரூ.30,999க்கு பட்டியலிடப்பட்டுள்ளது. இது தவிர, பிளிப்கார்ட்டில் உங்கள் பழைய ஸ்மார்ட்போனுக்கு ஈடாக ரூ.30,000 வரை தள்ளுபடி வழங்குகிறது. எனவே இது நத்திங் ஃபோனின் 1 விலை ரூ.999க்கு வாங்கலாம் என்பது குறிப்ப்பிடத்தக்கது.

6.55 இன்ச் OLED டிஸ்ப்ளேவுடன், டிஸ்ப்ளே மேல் கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பு மற்றும் 120Hz அம்சத்துடன் இந்த போன் கிடைக்கும். மேலும் கைரேகை சென்சார், Qualcomm Snapdragon 778G+ பிராஸசர் மற்றும் 12 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் உடன் இந்த போன் கிடைக்கும்.

நத்திங் ஃபோன் (1) ஆண்ட்ராய்டு அடிப்படையிலான நத்திங் ஓஎஸ் மூலம் இயங்குகிறது. இந்த ஸ்மார்ட்போன் 4,500 mAh பேட்டரி மூலம் 33W ஃபாஸ்ட் சார்ஜிங்கிற்கான ஆதரவுடன் உள்ளது. கேமராவைப் பொறுத்தவரை, ஸ்மார்ட்போனில் 50எம்பி பிரைமரி சென்சார் மற்றும் 50எம்பி அல்ட்ரா வைட் சென்சார் கொண்ட இரட்டை கேமரா அமைப்பை பின்புறத்தில் கொண்டுள்ளது. 16MP செல்பி கேமிராவும் இதில் உண்டு.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews