தேசபக்தி படத்துக்கே வரிவிலக்கு கொடுக்கல..! படத்துல இருந்த குறை இதுதானாம்.. அர்ஜுன் ஆதங்கம்

தேச பக்திப் படங்கள் என்றாலே புரட்சிக் கலைஞர் விஜயகாந்த்துக்கு அடுத்து என்றும் நம் மனதில் நிற்பவர் ஆக்சன் கிங் அர்ஜுன். தனது அதிரடி சண்டைக்காட்சிகளிலும், ஏற்று நடித்த கதாபாத்திரங்களில் பெரும்பாலும் நாட்டைக் காப்பாற்றுவது, தேச பக்தி ஊட்டுவது போன்றவையாகவே இருக்கும். அண்மையில் லியோ வெற்றி விழாவில் கூட என்னை யார் எங்கு பார்த்தாலும் ஜெய்ஹிந்த் என்று தான் அறிமுகம் ஆவார்கள் என்று பேசியிருந்தார்.

அவ்வாறு அமைந்த படங்களில் இவருக்கு முக்கிய திருப்புமுனையாக அமைந்த படம்எதுவென்றால் அதுஜெய்ஹிந்த் படம் தான். 1994-ல் அர்ஜுனே இயக்கி நடித்த இப்படம் இமாலய வெற்றி பெற்றது. இதில் இடம் பெற்ற டைட்டில் டிராக் வைரமுத்துவின் வரிகளில் உருவான தாயின் மணிக்கொடி தாயின் மணிக்கொடி பாடல் எஸ்.பி.பியின் அற்புதமான குரலில் நம் நாட்டின் மீதான தேசப்பற்றை நமக்கு அதிகரிக்க வைக்கும். வித்யாசாகர் இசையில் அமைந்த இப்பாடல் கேட்கும் போதே புல்லரிக்க வைக்கும். தீவிரவாத கும்பலிடம் இருந்து நாட்டைக் காக்கும் கதாபாத்திரத்தில் அர்ஜுன் மிரட்டியிருப்பார்.

இதனையடுத்து கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் அர்ஜுன் இயக்கத்தில் அவரே நடித்து வெளியான ஜெய்ஹிந்த் 2 படமும் கல்வி அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டது. கல்விச் சுரண்டலையும், இந்தியாவின் வல்லரசையும் பற்றி அலசி ஆராய்ந்தது. இப்படமும் வெற்றி பெற்றது.

சிம்புவுடன் கைகோர்க்கும் தனுஷ் : எந்தப் படத்தில் தெரியுமா? கசிந்த ரகசியம்!

இந்நிலையில் அர்ஜுன் இயக்கி நடித்த இவ்விரு படங்கள் பற்றியும் அப்போது வந்த சிக்கல் ஒன்றை நடிகர் அர்ஜுன் யூடியூப் சேனல் ஒன்றில் பேசியுள்ளார். அந்த படத்திற்கு வரி விலக்கு தர மறுத்துவிட்டார்களாம். ஏனெனில் ஜெய்ஹிந்த் என்பது தமிழ் வார்த்தை கிடையாது. எனவே தமிழ் தலைப்பு வைக்கும் படங்களுக்கு மட்டுமே வரிவிலக்கு உண்டு என்று கூறினார்களாம். உடனே அர்ஜுன் இதுகுறித்து மேலே யார் கிட்ட பேசனுமோ பேசுறேன் என்ற போதும் கூட வரிச்சலுகை கிடைக்கவில்லையாம். இதனால் தமக்கு நஷ்டம் ஏற்பட்டதாக அந்தப் பேட்டியில் கூறியுள்ளார் நடிகர் அர்ஜுன்.

இவரின் இந்தப்பேட்டி சமூக வலைதளங்களில் பரவி வரும் நிலையில் தமிழக அரசு செய்தது சரிதான் என்று கமெண்ட்டில் பதிவிட்டு வருகின்றனர் நெட்டிசன்கள்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews