சம்மதத்துடன் உடலுறவு கொண்டால் அது கற்பழிப்பு கிடையாது: கொல்கத்தா நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு..!

ஆண் பெண் ஆகிய இருவரும் சம்மதத்துடன் உடலுறவு கொண்டால் அது கற்பழிப்பு குற்றம் ஆகாது என கொல்கத்தா நீதிமன்றம் அதிரடியாக தீர்ப்பளித்து குற்றவாளி என கீழ் கோர்ட் தீர்ப்பளித்ததை மறுத்து உள்ளது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கொல்கத்தாவை சேர்ந்த ஒருவர் 13 வயது சிறுமியுடன் பாலுறவு கொண்டு அவரை கர்ப்பம் ஆக்கியதாக சிறுமியின் தரப்பில் இருந்து நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. 2021 ஆம் ஆண்டு இந்த வழக்கின் தீர்ப்பு வெளியாகி குற்றவாளிக்கு தண்டனை தீர்ப்பளிக்கப்பட்டது

குற்றவாளி தரப்பில் மேல்முறையீடு செய்த போது பாதிக்கப்பட்டவர் சிறுமி என்பததற்கான ஆதாரத்தை அரசு தரப்பில் இருந்து சமர்ப்பிக்கவில்லை. மேலும் அவரிடம் விசாரித்த போது அவர் தனக்கு 24 வயது என்று கூறியது பரபரப்பு ஏற்படுத்தியது ஒத்துக்

தன்னை பலமுறை குற்றவாளி பாலியல் பலாத்காரம் செய்ததாகவும், அதனால் தான் கர்ப்பமானதாகவும் எழுத்துப்பூர்வமாக அந்த பெண் புகார் அளித்ததை எடுத்து கீழ் கோர்ட் அவருக்கு தண்டனை அளிக்கிறது. ஆனால் அந்த குற்றவாளிடம் விசாரணை செய்தபோது தான் அந்த பெண்ணை திருமணம் செய்து கொள்ள தயாராக இருந்ததாகவும் அவருடன் உடலுறவு கொண்டது உண்மைதான் என்றும் ஆனால் அவர் 13 வயது சிறுமி அல்ல என்றும் அதுமட்டுமின்றி அவருடைய முழு சம்மதத்துடன் தான் உடலுறவு நடந்தது என்று தெரிவித்தார்

இதனை அடுத்து 13 வயது சிறுமி என்பதற்கான எந்த ஆதாரத்தையும் அரசு தரப்பில் தாக்கல் செய்யாத அதை அடுத்தும், அது மட்டுமின்றி உடலுறவு அந்த பெண்ணின் சம்மதத்துடன் நடந்துள்ளதால் இது கற்பழிப்பு என்ற குற்றத்தில் வராது என்று கூறி குற்றவாளி இல்லை என உறுதி செய்து அவரை கொல்கத்தா ஹை கோர்ட் விடுதலை செய்து தீர்ப்பளித்தது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews