ஒரு பக்கம் சோறு போடும் விவசாயிகளுக்கான அசத்தல் திட்டம்.. இன்னொரு பக்கம் உலக அளவிலான போட்டியை சமாளிக்க அறிவகம் என்ற ஏஐ தொழில்நுட்ப நகரம்.. இதுதான் விஜய் அரசின் அசத்தல் பட்ஜெட்..

உலகமே AI-வை தேடி ஓடிட்டு இருக்குனா… அந்த உலகமே திரும்பிப் பாக்குற அளவுக்கு ‘அறிவகம்’ உருவாக்குறது தான் நம்ம முதல்வர் விஜய்யோட திட்டம்.. அமெரிக்ககாரனோட சிலிகான் வேலி மட்டும்தான் கெத்தா? இனி உலக தொழில்நுட்ப…

vijay arivagam

உலகமே AI-வை தேடி ஓடிட்டு இருக்குனா… அந்த உலகமே திரும்பிப் பாக்குற அளவுக்கு ‘அறிவகம்’ உருவாக்குறது தான் நம்ம முதல்வர் விஜய்யோட திட்டம்.. அமெரிக்ககாரனோட சிலிகான் வேலி மட்டும்தான் கெத்தா? இனி உலக தொழில்நுட்ப வரைகடத்துல முதலிடத்துல நிக்கப்போறது நம்ம தமிழ்நாடுதான்! வேலை தேடி வெளிநாட்டுக்கு ஓடுன காலம் போயிருச்சு… இனி உலகமே வேலை தேடி நம்ம தமிழ்நாட்டை நோக்கி வரப்போகுது.. பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட அசத்தலான அறிவகம் திட்டம்..

தமிழ்நாடு அரசுத் தலைமைச் செயலகத்தில் நிதியமைச்சர் மரிய வில்சன் தாக்கல் செய்த 2026-27-ஆம் நிதியாண்டிற்கான திருத்தப்பட்ட வரவு செலவுத் திட்டத்தில், இந்தியாவின் முதல் செயற்கை நுண்ணறிவு மற்றும் நவீன கண்டுபிடிப்புகளுக்கான “அறிவகம்” தொழில்நுட்ப நகரம் நிறுவப்படும் என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது. தமிழக வெற்றித் கழகத் தலைவர் மற்றும் முதலமைச்சர் திரு. சி. ஜோசப் விஜய் தலைமையிலான அரசு, தமிழ்நாட்டை சர்வதேச அளவில் செயற்கை நுண்ணறிவு மற்றும் Deep-Tech Hub ஆக மாற்றும் நோக்கில் இந்த தொலைநோக்குத் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இத்திட்டத்தின் முதற்கட்ட சாத்தியக்கூறு ஆய்வுகளுக்காக ரூ.5 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

“அறிவகம்” என்ற இந்த அதிநவீன நகரத்தில், செயற்கை நுண்ணறிவுத் துறைக்கென உலகத் தரம் வாய்ந்த பிரத்யேக AI பல்கலைக்கழகம், சர்வதேச திறன் மேம்பாட்டு மையம், Semiconductor வன்பொருள் பரிசோதனைக்கூடங்கள் மற்றும் வளர்ந்து வரும் நிறுவனங்களை ஊக்குவிக்கும் Startup Incubators அமையவுள்ளன. மேலும், இந்த தொழில்நுட்ப மையத்தில் பணிபுரியும் நவீன கண்டுபிடிப்பாளர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்களுக்குத் தேவையான அனைத்து வசதிகளுடன் கூடிய குடியிருப்புகள் மற்றும் உள்கட்டமைப்புகளும் ஒருங்கிணைந்த முறையில் ஒரே இடத்தில் அமைக்கப்பட உள்ளன.

தொழில்நுட்ப வளர்ச்சியையும் ஆராய்ச்சியையும் அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்படும் இந்த அறிவகம் நகரம், ஆழமான தொழில்நுட்பக் கண்டுபிடிப்புகள், குவாண்டம் தொழில் நுட்பங்கள் மற்றும் டிஜிட்டல் சேவைகளை ஒன்றிணைக்கும் மையமாகச் செயல்படும். இதன் மூலமாக உயர்மட்டத் தொழில்நுட்பத் துறைகளில் சர்வதேச முதலீடுகளை ஈர்ப்பதோடு, உள்நாட்டு மற்றும் சர்வதேசத் தொழில்நுட்ப நிறுவனங்களின் பங்களிப்பைத் தமிழ்நாட்டை நோக்கித் திருப்ப தவெக அரசு திட்டமிட்டுள்ளது.

தொழில்நுட்ப உட்கட்டமைப்புகளுடன் நிற்காமல், இளைய தலைமுறையினரை எதிர்கால தொழில் தேவைகளுக்கு ஏற்பத் தயார்படுத்தும் நோக்கில் கல்வி மற்றும் தொழிற்பயிற்சிகளுக்கும் இதில் முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. அறிவகத்தில் அமையவிருக்கும் சர்வதேச திறன் மேம்பாட்டு மையம் மூலம் லட்சக்கணக்கான கல்லூரி மாணவர்களுக்கும் இளைஞர்களுக்கும் சர்வதேசத் தரத்திலான செயற்கை நுண்ணறிவு மற்றும் ரோபோடிக்ஸ் பயிற்சிகள் வழங்கப்பட இருக்கின்றன. இதன் மூலம் இந்தியாவிலேயே அதிக அளவு திறமைமிக்க மனிதவளத்தைக் கொண்ட மாநிலமாகத் தமிழ்நாட்டைத் தக்கவைத்துக் கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

வேலைவாய்ப்பு உருவாக்கத்தைப் பொறுத்தவரை, அறிவகம் நகரம் புதிய பொருளாதார வாய்ப்புகளுக்கான வாயிலாக அமையும் எனக் எதிர்பார்க்கப்படுகிறது. உயர்தர ஆராய்ச்சி, மென்பொருள் மேம்பாடு, குறைக்கடத்தி வடிவமைப்பு மற்றும் வன்பொருள் பரிசோதனை ஆகிய துறைகளில் ஆயிரக்கணக்கான வேலைவாய்ப்புகள் நேரடியாகவும் மறைமுகமாகவும் உருவாக்கப்படும். தகவல் தொழில்நுட்ப ஏற்றுமதியை மேலும் உயர்த்தி, 2036-க்குள் தமிழ்நாட்டை 1.5 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக உயர்த்தும் தவெக அரசின் இலக்கிற்கு இத்திட்டம் வலுவூட்டும்.

ஒட்டுமொத்தமாக, “அறிவகம்” தொழில்நுட்ப நகரின் உருவாக்கமானது தமிழ்நாட்டின் தகவல் தொழில்நுட்ப மற்றும் தொழில் வளர்ச்சியில் ஒரு புதிய சகாப்தத்தின் தொடக்கமாகப் பார்க்கப்படுகிறது. நவீனத் தொழில்நுட்பங்கள், தொழில்முனைவோர் ஊக்குவிப்பு மற்றும் சர்வதேச முதலீடுகளை ஒருங்கிணைத்துச் செயல்படுத்துவதன் மூலம், இந்தியாவிலேயே முதன்மை டிஜிட்டல் மாநிலமாகத் தமிழ்நாட்டை நிலைநிறுத்துவதோடு, வரும் தலைமுறையினருக்கு நிலையான எதிர்காலத்தை அமைத்துத் தரும் முன்னோடி முயற்சியாக இது திகழும்.