இதுவரைக்கும் அதிகாரிகளிடம் ஆலோசனை கேட்ட முதல்வர் விஜய், இப்போது தன்னிச்சையாக முடிவெடுக்க தொடங்கிவிட்டார்.. ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் டிரான்ஸ்பர் எல்லாமே முதல்வரே டிக் செய்தது.. கேட்ட கேள்விக்கு பதில் சொல்ல தெரியலைன்னா டிரான்ஸ்பர்.. சேகர் பாபு விவகாரத்திற்காகவே ஒரு டிரான்ஸ்பர்.. 2 மாதங்களில் எல்லாத்தையும் கத்துக்கொண்டார் முதல்வர்…

ஜூலை 16-ம் தேதி நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில், அதிகாரிகளைச் சில நிமிடங்கள் வெளியே அனுப்பிவிட்டு அமைச்சர்களை முதல்வர் விஜய் கடுமையாக எச்சரித்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. லஞ்சம் மற்றும் ஊழல் புகார்கள் வந்தால் எத்தகைய பெரிய…

cm vijay secretariet1

ஜூலை 16-ம் தேதி நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில், அதிகாரிகளைச் சில நிமிடங்கள் வெளியே அனுப்பிவிட்டு அமைச்சர்களை முதல்வர் விஜய் கடுமையாக எச்சரித்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. லஞ்சம் மற்றும் ஊழல் புகார்கள் வந்தால் எத்தகைய பெரிய பொறுப்பில் இருப்பவராக இருந்தாலும் அமைச்சர் பதவியில் இருந்து தூக்கி எறிந்துவிடுவேன் என்று அவர் கறாராக எச்சரித்துள்ளதால் கூட்டத்தில் நிசப்தம் நிலவியுள்ளது. அமைச்சர்கள் யாரும் தேவையின்றிப் பள்ளி மற்றும் மருத்துவமனை ஆய்வுகள் என்ற பெயரில் சுற்றுப்பயணம் செய்வதைத் தவிர்த்துவிட்டு, தங்களது துறை சார்ந்த பணிகளிலும் பட்ஜெட் விவாதங்களுக்குத் தயாராவதிலும் கவனம் செலுத்த வேண்டும் என்று அவர் கண்டிப்புடன் அறிவுறுத்தியுள்ளார்.

சர்ச்சைகளிலும் ஊழல் புகார்களிலும் சிக்கும் அமைச்சர்களை முதல்வர் நிச்சயம் பதவி நீக்கம் செய்வார் என்று விவரப்புள்ளிகள் தெரிவிக் கின்றனர். இதற்கிடையே, கனிம வளத்துறை அமைச்சர் டாக்டர் பிரபு தம்மால் அத்துறையை எளிதாகக் கையாள முடியவில்லை என்பதால் வேறு துறைக்கு மாற்ற கோரி முதல்வரிடம் பேசத் திட்டமிட்டுள்ளாராம். இத்தகைய சூழலில், சில முக்கியப் பிரமுகர்கள் அமைச்சரவையில் இடம்பிடிக்கவும், கனிம வளத்துறையைக் கைப்பற்றவும் தீவிரமாக முயன்று வருவதாகக் கூறப்படுகிறது. இருப்பினும், யார் என்ன நினைத்தாலும் முதல்வர் நினைப்பது மட்டுமே நடக்கும் என்பதற்கு சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் பணியிட மாற்றமே சான்றாக உள்ளது.

இதுநாள் வரை பவர் சென்டர்களின் சிபாரிசுகளின் அடிப்படையில் நடந்து வந்த பணியிட மாற்றங்கள் தடுத்து நிறுத்தப்பட்டு, சமீபத்திய ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் மாற்றம் முழுவதுமாக முதல்வரின் நேரடி உத்தரவின் பேரிலேயே செயல்படுத்தப்பட்டுள்ளது. சுப்ரியா சாஹு, உமாநாத், ஜெ.ராதாகிருஷ்ணன், வள்ளலார், பாஸ்கர பாண்டியன் மற்றும் பூஜா குல்கர்னி உள்ளிட்ட பல மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் முக்கியப் பொறுப்புகளில் இருந்து மாற்றப்பட்டு டம்மியான இடங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளனர். நிர்வாகத்தின் மீதான பிடியை முதல்வர் மிகத் தீவிரமாக தனது கைகளில் எடுக்கத் தொடங்கியுள்ளார் என்பதை இந்த அதிரடி மாற்றங்கள் வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றன.

குறிப்பாக, வியாசர்பாடியில் நடைபெற்ற மின்சாரப் பேருந்து இயக்க விழாவின்போது முதல்வர் எழுப்பிய கேள்விக்குச் சரியாகப் பதிலளிக்காத காரணத்தினாலேயே அதிகாரி வள்ளலார் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். அதேபோன்று, பள்ளிக்கரணை சதுப்பு நிலப் பகுதியில் கட்டடம் கட்ட அனுமதி வழங்கப்பட்ட விவகாரத்தில் முன்னாள் அமைச்சர் சேகர் பாபுவின் தொடர்புகள் குறித்து விசாரணை நடத்தப்பட உள்ளதால், சுற்றுச்சூழல் துறையில் முக்கியப் பொறுப்பில் இருந்த சுப்ரியா சாஹு அந்தப் பதவியில் இருந்து மாற்றப்பட்டுள்ளார். நிர்வாகத் திறமையின்மையையும் விதிமீறல்களையும் முதல்வர் ஒருபோதும் சகித்துக்கொள்ள மாட்டார் என்பதை இந்த நடவடிக்கைகள் உணர்த்துகின்றன.

இந்த அதிரடி பணியிட மாற்றத்துக்கான உத்தரவுகள் அனைத்தும் தலைமைச் செயலாளர் சாய்குமார் மற்றும் முதல்வரின் தனிச் செயலாளர் செந்தில்குமார் ஆகியோர் இணைந்து மிக இரகசியமாகத் தயாரித்துள்ளனர். முதல்வருக்கு முக்கிய ஆலோசகராக விளங்கும் விஷ்ணு ரெட்டிக்கு மட்டுமே இந்தத் டிரான்ஸ்ஃபர் குறித்த முன்கூட்டிய தகவல் தெரிந்துள்ளதாகவும், மற்ற அனைத்துப் பவர் சென்டர்களுக்கும் அரசாணை வெளியான பின்னர்தான் விவரம் தெரியவந்துள்ளது என்றும் கூறப்படுகிறது. இதன் மூலம் நிர்வாகத்தின் அனைத்துச் சூட்சுமங்களையும் சாவதானமாக முதல்வர் விஜய் தனது நேரடிக் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவர ஆரம்பித்துவிட்டார் என்பது தெளிவாகிறது.

தமிழக நிர்வாக அமைப்பில் எவ்வித சமரசத்திற்கும் இடமளிக்காமல், லஞ்சமற்ற மற்றும் திறமையான ஆளுமையை வழங்குவதில் முதல்வர் விஜய் தீவிரமாகக் காய் நகர்த்தி வருகிறார். அமைச்சர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள கடும் எச்சரிக்கையும், அதிகாரிகளை அதிரடியாக மாற்றி அமைத்துள்ளதும் எதிர்கால அரசியல் மற்றும் நிர்வாக மாற்றங்களின் முன்னோட்டமாகப் பார்க்கப்படுகிறது. முதல்வரின் இந்த அதிரடி நடவடிக்கைகள் அரசியல் வட்டாரத்திலும் தலைமைச் செயலகத்திலும் பெரும் பரபரப்பையும் விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளன.