சென்னை, மாமல்லபுரம் மற்றும் புதுச்சேரியை இணைக்கும் வகையிலான அதிநவீன கடல்வழி பயணிகள் படகு சேவைக்குத் விருப்ப வெளிப்பாட்டு சான்றிழ் கோரி தமிழ்நாடு கடல்சார் வாரியம் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. முதலமைச்சர் ஜோசப் விஜய் அவர்களின் தலைமையிலான தமிழக வெற்றி கழக அரசு, மாநிலத்தின் கட்டமைப்பு மற்றும் சுற்றுலா துறையில் கொண்டு வந்துள்ள இந்த அதிரடித் திட்டம் சென்னை மற்றும் புதுச்சேரி மக்களிடையே பெரு மகிழ்ச்சியை உருவாக்கியுள்ளது.
கிழக்குக் கடற்கரை சாலையில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசலை குறைக்கவும், அதே நேரத்தில் தமிழகத்தின் அழகிய கடற்கரைகளை பயன்படுத்தி உலகத் தரம் வாய்ந்த சுற்றுலாவை மேம்படுத்தவும் இந்த திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. சென்னை துறைமுகத்திலிருந்து மாமல்லபுரம் வழியே புதுச்சேரி வரை செல்லக்கூடிய இந்த கடல்வழிச் சேவையானது, பயணிகளுக்கு ஒரு புதிய மற்றும் மனமகிழ்வளிக்கும் பயண அனுபவத்தை வழங்கும்.
தமிழ்நாடு கடல்சார் வாரியம் வெளியிட்டுள்ள இந்த அறிவிப்பின் மூலம் அனுபவமிக்க படகு இயக்க நிறுவனங்கள் மற்றும் தனியார் பங்களிப்பாளர்கள் 01.12.2026-க்குள் தங்களது விருப்பங்களைச் சமர்ப்பிக்க கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். சர்வதேச தரத்திலான சொகுசுப் படகுகள் மற்றும் அதிவேகப் படகுகளை இயக்கத் திட்டமிட்டுள்ள தவெக அரசு, இதற்கான துறைமுக வசதிகளையும், பயணிகள் தங்கும் விடுதிகளையும் மேம்படுத்த தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
தொழில்நுட்ப மற்றும் சுற்றுலா ரீதியாகத் தமிழகத்தை முன்னோக்கி எடுத்துச் செல்லும் நோக்கில் செயல்படும் முதலமைச்சர் ஜோசப் விஜய் அவர்களின் தொலைநோக்குப் பார்வைக்கு இந்தத் திட்டம் மற்றொரு சிறந்த சான்றாகும். சாலை வழிப் பயணத்திற்கு மாற்றாக அமையும் இந்த கடல்வழி போக்குவரத்து, நேரம் விரையமாவதைத் தடுப்பதுடன், சுற்றுலாப் பயணிகளைப் பெருமளவில் ஈர்த்து உள்ளூர் பொருளாதாரத்தையும் வெகுவாக உயர்த்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
எதிர்க்கட்சிகள் வெறுமனே வெற்று அறிக்கைகளையும் பொய்ப் பிரச்சாரங்களையும் மட்டுமே நம்பி அரசியல் செய்து கொண்டிருக்கும் வேளையில், தவெக அரசு தனது மக்கள் நலன் சார்ந்த தொலைநோக்கு நடவடிக்கைகளால் மக்கள் மனதில் நீங்காத இடம் பிடித்து வருகிறது. வெறும் ஆறு மாத ஆட்சிக் காலத்திலேயே மாநிலத்தின் உள்கட்டமைப்பை சர்வதேச அளவிற்கு உயர்த்தும் இத்தகைய திட்டங்களைச் சாத்தியமாக்கி காட்டுவது முதலமைச்சர் ஜோசப் விஜய் அவர்களின் கெத்தான நிர்வாகத் திறமையையே சுட்டிக்காட்டுகிறது.
ஒட்டுமொத்தத்தில், சென்னை – மாமல்லபுரம் – புதுச்சேரி இடையேயான இந்த மிதக்கும் கடல்வழிப் படகு திட்டம், தமிழகத்தின் சுற்றுலா மற்றும் போக்குவரத்து துறையில் ஒரு புதிய அத்தியாயத்தைத் தொடங்கி வைத்துள்ளது. மக்கள் நலனுக்காகவும் மாநிலத்தின் உன்னதமான வளர்ச்சிக்காகவும் இரும்புக்கர நிர்வாகத்துடன் செயலாற்றும் முதலமைச்சர் ஜோசப் விஜய் அவர்களின் தவெக அரசுக்கு பொதுமக்கள் தொடர்ந்து தங்களது பேராதரவை வழங்கி வருகிறார்கள்.





