விருச்சிகம் புத்தாண்டு ராசி பலன் 2024!

Viruchigam Puthandu Rasi Palan 2024: விருச்சிக ராசி அன்பர்களே! 2024ஆம் ஆண்டினைப் பொறுத்தவரை சனி பகவான் பெரிதாக எந்தவொரு இடப் பெயர்ச்சியினையும் செய்யவில்லை; வக்ரம் மட்டும் அடைகிறார்.

2024 ஆம் ஆண்டின் பாதியில் குரு பகவான் மேஷ ராசியில் இருந்து ரிஷப ராசிக்கு இடம் பெயர்கிறார். ராகு- கேது எந்தவொரு இடப் பெயர்ச்சியும் செய்யவில்லை.

விருச்சிக ராசியினைப் பொறுத்தவரை பொதுவாக போராட்டங்களைச் சந்திக்கிற நபர்கள் நீங்கள்! சனி பகவான் 4 ஆம் இடத்தில் இட அமர்வு செய்கிறார்; 5 ஆம் இடத்தில் ராகு பகவான் இட அமர்வு செய்கிறார்.

ராகு பகவான் மனநிலையில் குழப்பங்கள், வருத்தங்கள், சங்கடங்களை ஏற்படுத்துவார். தேவையில்லாத சிந்தனைகள் உங்களுக்கு மனதளவில் நெருக்கடியினைக் கொடுப்பதாய் இருக்கும்.

எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் இருந்துவிடுவது நல்லது. தினசரி என்ற அளவில் யோகா, தியானம் செய்யுங்கள். மேலும் அருகில் உள்ள கோயில்களுக்கு அவ்வப்போது சென்று வாருங்கள்.

எந்த காரியமும் நீங்கள் நினைத்த வேகத்தில் நடக்கவில்லையே என்ற கோபம் உங்களுக்குள் இருக்கும். மே மாதத்திற்குப் பின்னர் குரு பகவானின் பெயர்ச்சியால் உங்களின் பல பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும். சாதகமான விஷயங்களை எதிர்பார்க்கலாம்.

வேலைவாய்ப்பினைப் பொறுத்தவரை புதிய வேலை, இட மாற்றம், துறை சார்ந்த மாற்றங்களை குரு பெயர்ச்சிக்குப் பின்னர் செய்யுங்கள். தொழில் வாழ்க்கை என்று கொண்டால் இருப்பதைக் கொண்டு ஜனவரி முதல் ஏப்ரல் மாதம் வரையிலான காலகட்டத்தினை நகர்த்துங்கள். மே மாதத்திற்குப் பின் உங்கள் மீதான அவப் பெயர் சரியாகும்.

திருமண காரியங்கள் என்று கொண்டால் மே மாதத்திற்குப் பின் ஜாதகத்தினை தூசி தட்டி எடுத்து வரன் பார்க்கும் முயற்சியில் களம் இறங்கலாம்.

பொருளாதாரம் என்று பார்க்கையில் வரவு, செலவு இரண்டும் சமமாகவே இருக்கும். வாகனங்கள் ரீதியாக செலவினங்கள் ஏற்படும். வீட்டில் எலெக்ட்ரானிக்ஸ் சார்ந்த பொருட்களிலும் பழுதுகள் ஏற்படும்.

வெளிநாடு, வெளியூர்ப் பயணங்கள் உங்களுக்கு பெரிய அளவில் சௌகரியமானதாக இருக்காது. மாணவர்கள் உயர் கல்வி சார்ந்த முடிவுகளை எடுப்பதற்கு ஏற்ற காலகட்டமாக இருக்கும்.

உடல் ஆரோக்கியம் என்று கொண்டால் ஏதாவது ஒரு உடல் தொந்தரவுகள் இருந்து கொண்டே இருக்கும்.

உங்கள் பிறந்தக் கிழமைக்கான பலன்கள் இதோ!

சாமுத்ரிகா லட்சணப்படி மச்ச பலன்கள்!

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.