துலாம் புத்தாண்டு ராசி பலன் 2024!

Thulam Puthandu Rasi Palan 2024: துலாம் ராசி அன்பர்களே! 2024ஆம் ஆண்டினைப் பொறுத்தவரை சனி பகவான் பெரிதாக எந்தவொரு இடப் பெயர்ச்சியினையும் செய்யவில்லை. ஆண்டின் பாதியில் குரு பகவான் மேஷ ராசியில் இருந்து ரிஷப ராசிக்கு இடம் பெயர்கிறார்.

5 ஆம் இடத்தில் சனி பகவான் இட அமர்வு செய்கிறார். ராகு- கேது முற்றிலும் விலகிவிட்டது. குரு பகவானின் இடப் பெயர்ச்சி பெரிய அளவில் உங்களுக்குப் பாதிப்பினை ஏற்படுத்தாது.

சுக்கிர பகவானின் இடப் பெயர்வு ஏறக்குறைய 8 மாதங்கள் உங்களுக்குச் சாதகமானதாக இருக்கும். சுக்கிரனுடன் புதன் பகவானும் சூர்ய பகவானும் இணைந்து இடப் பெயர்ச்சி செய்கின்றனர்.

2024 ஆம் ஆண்டு நீங்கள் நினைத்த விஷயங்களை நினைத்தவாறு செய்து முடிக்க ஏற்ற காலகட்டம் என்றே கொள்ளலாம். வேலைவாய்ப்பினைப் பொறுத்தவரை நீங்கள் எதிர்பாராத மாற்றங்களை காண்பீர்கள். அசுர வேக அளவிலான வளர்ச்சியினைக் காண்பீர்கள்.

பதவி உயர்வு, இட மாற்றம், பதவி மாற்றம், துறை சார்ந்த மாற்றங்கள் என இது உங்களுக்கான ஆண்டாக இருக்கும். காதல் வாழ்க்கை என்று கொண்டால் இதுவரை பெற்றோர்கள் உங்கள் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து வந்தநிலையில் தற்போது பச்சைக் கொடி காட்டுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளது.

மேலும் திருமண வாழ்க்கை என்று கொண்டால் நீங்கள் எதிர்பார்த்தது போன்ற வரன் அமையப் பெறும். எந்தவித தடையும் இல்லாமல், பொருத்தமான வரன், சுபமான சந்திப்பு என்பது போன்ற திருப்திகரமான திருமணம் நடைபெறும்.

குழந்தை பாக்கியத்துக்கு எதிர்பார்த்துக் காத்திருப்போருக்கு நற் செய்தி கிடைக்கப் பெறும். வீடு, மனை சார்ந்த முதலீடுகளைச் செய்வீர்கள்; சொந்த வீடு என்ற கனவானது பலருக்கும் நனவாகும்.

இல்லத்தரசிகள் தங்க நகைகளை வாங்கி மகிழ்வீர்கள். அதீத வளர்ச்சி தரும் பல முதலீடுகளையும் செய்வீர்கள். மாணவர்களைப் பொறுத்தவரை நீங்கள் இந்த ஆண்டு எடுக்கும் முடிவானது உங்கள் வாழ்க்கையினைத் தீர்மானிக்கும் முடிவாக இருக்கும்.

குடும்ப வாழ்க்கை என்று கொண்டால் நீங்கள் நினைத்த விஷயங்கள் கிடைக்கும். மேலும் திருப்திகரமான மண வாழ்க்கை அமையும். பயணங்கள் உங்கள் வெற்றியினைக் கொடுக்கும். பயணங்களால் சந்தோஷங்கள், பரிசுப் பொருட்கள் கிடைக்கும்.

பல விஷயங்களில் ராஜ யோகம் அடிக்கும். உடல் ஆரோக்கியத்தினைப் பொறுத்தவரை பெரிய அளவிலான பிரச்சினைகள் எதுவும் இல்லை.

உங்கள் பிறந்தக் கிழமைக்கான பலன்கள் இதோ!

சாமுத்ரிகா லட்சணப்படி மச்ச பலன்கள்!

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews