சிம்மம் புத்தாண்டு ராசி பலன் 2024!

Simmam Puthandu Rasi Palan 2024: சிம்ம ராசி அன்பர்களே! 2024 ஆம் ஆண்டினைப் பொறுத்தவரை சனி பகவான் பெரிதாக எந்தவொரு இடப் பெயர்ச்சியினையும் செய்யவில்லை; வக்ரம் மட்டும் அடைகிறார்.

2024 ஆம் ஆண்டின் பாதியில் குரு பகவான் மேஷ ராசியில் இருந்து ரிஷப ராசிக்கு இடம் பெயர்கிறார். ராகு- கேது எந்தவொரு இடப் பெயர்ச்சியும் செய்யவில்லை.

சிம்ம ராசியினைப் பொறுத்தவரை 2023 ஆம் ஆண்டில் சனி பார்வையினைத் தவிர மற்ற கிரகங்கள் ஓரளவு சுமாரான இருந்ததாகவே உணர்ந்து இருப்பீர்கள்.

2024 ஆம் ஆண்டில் ஜனவரி முதல் ஏப்ரல் மாதம் வரையிலான காலகட்டம் ஓரளவு சிறப்பானதாகவே இருக்கும். ஆனால் மே மாதத்தில் குரு பகவான் ரிஷப ராசிக்குப் பெயர்கிறார். சிம்ம ராசிக்கு 10 ஆம் இடத்தில் குரு பகவான் இட அமர்வு செய்கிறார்.

வேலைவாய்ப்பினைப் பொறுத்தவரை நீங்கள் சக பணியாளர்களுடனும் மேல் அதிகாரிகளுடனும் மிகச் சரியான முறையில் நடந்து கொள்ளுங்கள். இல்லையேல் தேவையற்ற அவமரியாதை, பதவி இறக்கம் போன்றவை ஏற்பட வாய்ப்புள்ளது.

சனி பகவானின் பார்வை வருடம் முழுவதும் உங்கள்மீது விழுகின்றது.  தேவையில்லாத இடையூறுகள், தொல்லைகள், பிரச்சினைகள் போன்றவற்றினை ஏற்படுத்துகின்றது.

குரு பகவான் சனி பகவானால் ஏற்படும் தடைகளில் நிவர்த்தியினை ஏற்படுத்துவார். குருவின் பார்வை ஏப்ரல் மாதத்திற்குப் பின் விழாது; அதனால் சனி பகவானின் பார்வையால் பல வகையான பிரச்சினைகள் ஏற்படும்.

கேது பகவான் 2 ஆம் இடத்தில் இட அமர்வு செய்துள்ளார். ராகு பகவான் 8 ஆம் இடத்தில் மறைமுக ஸ்தானத்தில் இட அமர்வு செய்துள்ளார். உங்களைச் சுற்றி பலவகையான நெருக்கடிகளைச் சந்திப்பீர்கள். மே மாதத்திற்குப் பின் பெரிதளவில் புதிய மாற்றங்களைச் செய்யாதீர்கள்.

இருப்பதைக் கொண்டே எஞ்சிய காலத்தினை நகர்த்துங்கள். மேலும் தேவையற்ற பேச்சுகளைத் தவிர்த்து தேவையான விஷயங்களை மட்டுமே பேசுங்கள். முடிந்தளவு நேர்மறையான விஷயங்களை மட்டும் பேசுங்கள்.

யாரிடமும் வாக்குக் கொடுக்காதீர்கள். உங்களுக்கு எதிராக நடக்கும் விஷயங்களை கண்டு கொள்ளாதீர்கள். பொறுமையுடனும் நிதானத்துடனும் செயல்படுதல் வேண்டும்.

உங்கள் பிறந்தக் கிழமைக்கான பலன்கள் இதோ!

சாமுத்ரிகா லட்சணப்படி மச்ச பலன்கள்!

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews