ரிஷபம் புத்தாண்டு ராசி பலன் 2024!

Rishabam Puthandu Rasi Palan 2024: ரிஷப ராசி அன்பர்களே! 2024 ஆம் ஆண்டினைப் பொறுத்தவரை சனி பகவான் பெரிதாக எந்தவொரு இடப் பெயர்ச்சியினையும் செய்யவில்லை; வக்ரம் மட்டும் அடைகிறார்.

2024 ஆம் ஆண்டின் பாதியில் குரு பகவான் மேஷ ராசியில் இருந்து ரிஷப ராசிக்கு இடம் பெயர்கிறார். ராகு- கேது எந்தவொரு இடப் பெயர்ச்சியும் செய்யவில்லை.

ரிஷப ராசியினைப் பொறுத்தவரை சனி பகவான் 10 ஆம் இடத்தில் இட அமர்வு செய்துள்ளார். மேலும் அவருடைய வீட்டில் அவருக்கான அதிகாரத்துடன் அமர்வு செய்துள்ளார்.

சனி பகவான் உங்களுக்கு முழுவதும் சாதகமாக இட அமர்வு செய்துள்ளார். ராகு பகவான் 11 ஆம் இடத்தில் இட அமர்வு செய்துள்ளார். ராகு பகவான் உங்களுக்கு திடீர் ராஜ யோகம், திடீர் வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுப்பார்.

நீங்கள் தேடும் விஷயங்கள், பல ஆண்டுகளாக எதிர்பார்த்துக் காத்திருந்த விஷயங்கள் அனைத்தும் நிறைவேறும். குரு பகவான் உங்கள் ராசிக்கு முழுமையான சுப கிரகம் கிடையாது. ஆனால் குரு பகவான் மே மாதம் உங்களுக்கு ஜென்ம குரு பகவானாக மாறுகிறார். உங்கள் மனநிலையில் சில வருத்தங்களையும் ஏமாற்றங்களையும் ஏற்படுத்துவார்.

பிடித்தது கிடைத்தாலும் திருப்தியின்மையினை ஏற்படுத்தி விடுவார். ரிஷப ராசி சுக்கிரனின் ஆதிக்கம் கொண்ட ராசி. பணம், பொருளாதாரம் சார்ந்த விஷயங்களில் ஏற்றம் இருக்கும். திருமண காரியங்கள் என்று கொண்டால் எந்தவித தடையோ, பிரச்சினையோ இல்லை.

குரு பகவானின் பார்வை 7 ஆம் இடத்தின் மேல் விழுகின்றது. குரு பகவான் ஜென்ம குருவாக மாறுகிறார். 2 ஆம் வீட்டில் எந்தவொரு எதிர்மறையான கோள்களும் அமரவில்லை; அதனால் உங்களுக்குப் பாதிப்பு ஏற்படும் வகையில் எந்தவொரு விஷயங்களும் நடந்தேறாது.

மாணவர்களைப் பொறுத்தவரை கல்வியில் ஆர்வத்துடன் படிப்பர். உயர் கல்வி ரீதியாக வெளிநாடு, வெளியூர் சென்று படிக்க நினைப்போருக்கு ராகு பகவான் உங்களுக்குச் சாதகமாகச் செயல்படுவார்.

வேலைவாய்ப்பு ரீதியாக வெளிநாடு செல்ல காத்திருப்போருக்கு திடீர் வெளிநாடு வாய்ப்புகள் அமையப் பெறும். உடல் நலன் சார்ந்த பெரிய அளவிலான தொந்தரவுகள் இருக்காது. சிறு சிறு உணவு சார்ந்த உபாதைகள் ஏற்படும்.

உங்கள் பிறந்தக் கிழமைக்கான பலன்கள் இதோ!

சாமுத்ரிகா லட்சணப்படி மச்ச பலன்கள்!

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.