மிதுனம் புத்தாண்டு ராசி பலன் 2024!

Midhunam Puthandu Rasi Palan 2024:மிதுன ராசி அன்பர்களே! 2024 ஆம் ஆண்டினைப் பொறுத்தவரை சனி பகவான் பெரிதாக எந்தவொரு இடப் பெயர்ச்சியினையும் செய்யவில்லை; வக்ரம் மட்டும் அடைகிறார்.

2024 ஆம் ஆண்டின் பாதியில் குரு பகவான் மேஷ ராசியில் இருந்து ரிஷப ராசிக்கு இடம் பெயர்கிறார்.

ராகு – கேது எந்தவொரு இடப் பெயர்ச்சியும் செய்யவில்லை.

மிதுன ராசியினைப் பொறுத்தவரை 2023 ஆம் ஆண்டு அஷ்டமச் சனி முடிவுக்கு வந்தது. 2024 ஆம் ஆண்டினைப் பொறுத்தவரை துவக்கமே சிறப்பாக உள்ளது. சனி பகவான் 9 ஆம் இடத்தில் இட அமர்வு செய்கிறார். சனி பகவானால் உங்களுக்கு எந்தவொரு இடையூறும் ஏற்படாது.

10 ஆம் இடத்தில் ராகு பகவான் இட அமர்வு செய்கின்றார். வாய்ப்புகளை நோக்கி நீங்கள் ஓடியது போய், வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும்.

11 ஆம் இடத்தில் குரு பகவான் இட அமர்வு செய்கிறார். பொருளாதாரம் என்று கொண்டால் போதுமான அளவில் பணவரவு இருக்கும்.

2024 ஆம் ஆண்டு ஜனவரி துவங்கி ஏப்ரல் மாதம் வரையிலான காலகட்டம் நீங்கள் எந்தவொரு புது விஷயங்களுக்கும் திட்டங்கள் தீட்டும் காலகட்டமாக இருக்கும்.

குரு பகவான் இடப் பெயர்ச்சிக்கு முன் மாற்றங்களைச் செய்வதற்கான முயற்சியினைச் செய்யுங்கள். பழைய கடன்களை அடைத்து சேமிப்பில் கவனம் செலுத்துவீர்கள்.

வெளிநாடு செல்ல முயற்சி செய்வோருக்கு வாய்ப்புகள் அமையப் பெறும். குடும்ப வாழ்க்கை என்று கொண்டால் கணவன்- மனைவி இடையே இருந்த சங்கடங்கள், மன உளைச்சல்கள் சரியாகும். பிரச்சினைகள் முடிவுக்கு வரும், திருமண காரியங்கள் என்று கொண்டால் மும்முரமாக வரன் தேடலாம், உங்களுக்கேற்ற வரன்கள் அமையும்.

பிரிந்திருந்த காதலர்கள் மீண்டும் ஒன்று சேர்வர். உடன் பிறப்புகளுடன் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் சரியாகும். வண்டி, வாகனங்கள் ரீதியிலான மாற்றங்களைச் செய்வீர்கள். திட்டங்களைச் சிறப்பாகத் தீட்டினால் அதற்கான பலன் உங்கள் கைமேல் கிட்டும்.

இல்லத்தரசிகள் தங்களுடைய திறமையினை வெளிக் கொணரும் வகையில் சிறு பிசினஸ்களைத் துவக்குவீர்கள். உடல் ஆரோக்கியம் என்று கொண்டால் கடந்த காலங்களில் மோசமான தொந்தரவுகளைச் சந்தித்து இருப்பீர்கள். கேது பகவான் 4 ஆம் இடத்தில் இருப்பதால் சிறு சிறு உடல் கோளாறுகள் ஏற்படும்.

உங்கள் பிறந்தக் கிழமைக்கான பலன்கள் இதோ!

சாமுத்ரிகா லட்சணப்படி மச்ச பலன்கள்!

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.