மேஷம் புத்தாண்டு ராசி பலன் 2024!

Mesham Puthandu Rasi Palan 2024: மேஷ ராசி அன்பர்களே! 2024 ஆம் ஆண்டினைப் பொறுத்தவரை சனி பகவான் பெரிதாக எந்தவொரு இடப் பெயர்ச்சியினையும் செய்யவில்லை; வக்ரம் மட்டும் அடைகிறார்.

ஆண்டின் பாதியில் குரு பகவான் மேஷ ராசியில் இருந்து ரிஷப ராசிக்கு இடம் பெயர்கிறார்.

ராகு- கேது எந்தவொரு இடப் பெயர்ச்சியும் செய்யவில்லை.

மேஷ ராசியினைப் பொறுத்தவரை சனி பகவான் 11 ஆம் இடத்தில் இட அமர்வு செய்துள்ளார். குரு பகவான் 1 ஆம் இடத்தில் உள்ளார்.

வேலைவாய்ப்பு என்று பார்க்கையில் எதிர்பார்க்கும் வகையிலான மாற்றங்கள் இருக்கும்.  புதிய வேலை, பதவி உயர்வு, சம்பள உயர்வு போன்ற விஷயங்களை எதிர்பார்க்கலாம்.

ராகு- கேது கிரகங்கள் உங்களுக்கு எந்தவொரு தொந்தரவினையும் கொடுக்காது. மேஷ ராசிக்கு வருடம் முழுவதும் சிறப்பாகவே இருக்கும். மேலும் 2024 ஆம் ஆண்டின் பிற்பாதியில் குரு பகவான் 1 ஆம் இடத்தில் இருந்து 2 ஆம் இடத்திற்குப் பெயர்கிறார். குரு பகவானின் இடப் பெயர்ச்சி உங்களுக்கு 90 சதவீதம் நேர்மறையான பலனைக் கொடுப்பதாய் இருக்கும்.

காதல் வாழ்க்கை என்று கொண்டால் காதலை வீட்டில் கூறி பெற்றோரின் சம்மதத்தினைப் பெறுவீர்கள். 12 மாதங்களில் 8 மாதங்கள் குரு பகவானின் அனுகிரகத்தால் அனுகூலமான விஷயங்களே நடக்கப் பெறும்.

குழந்தை வரம் வேண்டிக் காத்திருப்போருக்கு நற் செய்தி உங்களைத் தேடிவரும். மேலும் பொருளாதாரரீதியிலான வளர்ச்சியினைக் காண்பீர்கள். அசையும், அசையாச் சொத்துகள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள்.

வீடு கட்டுதல், கட்டிய வீட்டினைப் புதுப்பித்தல் என்பது போன்ற விஷயங்களில் ஈடுபடுவீர்கள். மேலும் தங்கநகை சார்ந்த முதலீடுகளையும் செய்வீர்கள். பழைய வண்டி, வாகனங்களை மாற்றி புது வண்டி, வாகனங்களை வாங்கச் செய்வீர்கள்.

மாணவர்களைப் பொறுத்தவரை பெரிய அளவில் தொந்தரவுகளோ பிரச்சினைகளோ கிடையாது. உடல் ஆரோக்கியம் என்று கொண்டால் சிறு சிறு உடல் தொந்தரவுகள் இருக்குமே தவிர பெரிய அளவில் உடல் தொந்தரவுகள் எதுவும் இருக்காது.

குடும்ப வாழ்க்கை என்று கொண்டால் கணவன்- மனைவி இடையேயான அன்பு அதிகரிக்கும். இல்லத்தரசிகள் திருப்திகரமான வாழ்க்கையினை வாழ்வீர்கள்.

முன்னேற்றம், அதிகாரம், பண பலம், தன்னம்பிக்கை போன்றவற்றை எதிர்பார்க்கலாம்.

உங்கள் பிறந்தக் கிழமைக்கான பலன்கள் இதோ!

சாமுத்ரிகா லட்சணப்படி மச்ச பலன்கள்!

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.