மீனம் புத்தாண்டு ராசி பலன் 2024!

Meenam Puthandu Rasi Palan 2024: மீன ராசி அன்பர்களே! 2024 ஆம் ஆண்டினைப் பொறுத்தவரை சனி பகவான் பெரிதாக எந்தவொரு இடப் பெயர்ச்சியினையும் செய்யவில்லை; வக்ரம் மட்டும் அடைகிறார்.

2024 ஆம் ஆண்டின் பாதியில் குரு பகவான் மேஷ ராசியில் இருந்து ரிஷப ராசிக்கு இடம் பெயர்கிறார். ராகு- கேது எந்தவொரு இடப் பெயர்ச்சியும் செய்யவில்லை.

மீன ராசியினைப் பொறுத்தவரை 2024 ஆம் ஆண்டில் சனி பகவான் 12 ஆம் இடத்தில் விரய ஸ்தானத்தில் உள்ளார். ராகு பகவான் 1 ஆம் வீட்டில் இட அமர்வு செய்துள்ளார். குரு பகவான் 2 ஆம் வீட்டில் இட அமர்வு செய்துள்ளார். வாக்கு ஸ்தானத்தில் குரு பகவான் இருப்பதால் சொல்வாக்கு அதிகரிக்கும்.

வேலைவாய்ப்பினைப் பொறுத்தவரை இருக்கும் இடத்தினைத் தக்க வைத்துக் கொள்ளுதல் நல்லது. இருப்பதைவிட்டு  புதிதாக பெரிய அளவிலான முயற்சிகளைச் செய்ய வேண்டாம். கிரகங்களின் நகர்வுகள் பெரிய அளவில் சாதகமாக இல்லாததால் நீங்கள் எடுக்கும் முடிவுகள் அனைத்தும் உங்களுக்கு வெற்றியினைத் தருவதாய் இருக்கப் போவதில்லை.

சிறிதளவு கவனத்துடன் இருத்தல் நல்லது. திருமண காரியங்களைப் பொறுத்தவரை ஜனவரி முதல் ஏப்ரல் மாதம் வரையிலான காலகட்டத்தில் திருமணத்தினை செய்து முடித்து விடுங்கள்.

மே மாதத்திற்குப் பின் திருமண வரன் பெரிதளவில் கைகூடாது; வரன் கைகூடினாலும் இந்த ஆண்டு திருமணத்தினைத் தவிர்த்து அடுத்த ஆண்டுக்குத் திட்டமிடவும்.

காதலர்கள் மத்தியில் பிரச்சினைகள், மனக் கசப்புகள் ஏற்படும். மாணவர்களைப் பொறுத்தவரை கல்விரீதியாக மந்தநிலையுடனே காணப்படுவர். நினைத்தது ஒன்று நடந்தது ஒன்றாகவே இருக்கும். நீங்கள் திட்டமிட்டபடி விஷயங்கள் செல்லாவிடில் விஷயங்கள் செல்லும் விதத்திற்கு நீங்கள் உங்களை சமாதானம் செய்து கொள்ளுங்கள்.

ஏழரை சனி காலமாக இருப்பதால் வண்டி, வாகனப் பயணங்களை மேற்கொள்ளும்போது கூடுதல் எச்சரிக்கையுடன் இருத்தல் வேண்டும். இல்லத்தரசிகளைப் பொறுத்தவரை குடும்ப உறுப்பினர்களின் தேவைகளுக்காக உங்கள் வாழ்க்கையினை அர்ப்பணித்துச் செல்லும்படியாக இருக்கும்.

அனைத்து வகையான நெருக்கடிகளிலும் நீங்கள் சமாளித்துச் செல்லும் வகையான தெளிவினை, புத்துணர்ச்சியினை குரு பகவான் உங்களுக்குக் கொடுப்பார்.

உடல் ஆரோக்கியம் ரீதியாக மிகக் கவனத்துடன் இருத்தல் வேண்டும். சிறிய அளவிலான தொந்தரவுகளும் பெரிய தொந்தரவுகளாக உருவெடுக்க வாய்ப்புள்ளது.

உங்கள் பிறந்தக் கிழமைக்கான பலன்கள் இதோ!

சாமுத்ரிகா லட்சணப்படி மச்ச பலன்கள்!

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.