மகரம் புத்தாண்டு ராசி பலன் 2024!

Magaram Puthandu Rasi Palan 2024: மகர ராசி அன்பர்களே! 2024 ஆம் ஆண்டினைப் பொறுத்தவரை சனி பகவான் பெரிதாக எந்தவொரு இடப் பெயர்ச்சியினையும் செய்யவில்லை; வக்ரம் மட்டும் அடைகிறார்.

2024 ஆம் ஆண்டின் பாதியில் குரு பகவான் மேஷ ராசியில் இருந்து ரிஷப ராசிக்கு இடம் பெயர்கிறார். ராகு- கேது எந்தவொரு இடப் பெயர்ச்சியும் செய்யவில்லை.

மகர ராசியினைப் பொறுத்தவரை ஏழரை சனி எப்போது முடியும் என்று எதிர்பார்த்துக் காத்துக் கொண்டு இருப்பீர்கள். கடந்த ஆண்டுகளைக் காட்டிலும் பல வகைகளில் இந்த ஆண்டு உங்களுக்கு சிறப்பானதாகவே இருக்கும்.

ராகு பகவான் உங்கள் ராசிக்கு 3 ஆம் வீட்டில் இட அமர்வு செய்துள்ளார். சனி பகவான் 2 ஆம் வீட்டில் இட அமர்வு செய்துள்ளார். குரு பகவான் 4 ஆம் வீட்டில் இட அமர்வு செய்துள்ளார்.

மே மாதம் குரு பகவான் 4 ஆம் வீட்டில் இருந்து 5 ஆம் வீட்டிற்குப் பெயர்கிறார். பெரும்பாலான கோள்களின் இடப் பெயர்வும் உங்களுக்குப் பெரிய அளவிலான பாதிப்பாக இருக்காது.

வேலைவாய்ப்பு என்று கொண்டால் முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார் என்பது போல் தீவிரமாக எந்தவொரு விஷயத்திற்கு முயற்சி செய்யும் பட்சத்தில் அதில் வெற்றி காண்பீர்கள்.

பொருளாதாரம் என்று கொண்டால் கடந்த ஆண்டில் பெரும் சரிவினையும், இழுபறியையும் சந்தித்தநிலையில் தற்போது அதில் இருந்து மீள்வீர்கள். பழைய கடன்களை அடைப்பீர்கள். திருமண காரியங்கள் என்று கொண்டால் மே மாதத்திற்குப் பின் குரு பகவானின் பார்வை விழுவதால் திருமண காரியங்கள் கைகூடும்.

காதலர்கள் வீட்டில் காதலைச் சொல்லும் போது பெற்றோர் மத்தியில் இருந்த கடுமையான எதிர்ப்புகள் குறையும். குடும்ப வாழ்க்கையில் பிரிந்திருந்த கணவன்- மனைவி ஒன்று சேர்வர். உடல் ஆரோக்கியம் என்று கொண்டால் பெரிய அளவிலான உடல் தொந்தரவுகள் சரியாகும்.

இல்லத்தரசிகளுக்கு 2024 ஆம் ஆண்டு பிரச்சினைகள் ஓயும் காலமாக இருக்கும்; நிவர்த்திகள், நிம்மதிகள் கிடைக்கும் காலமாக இருக்கும். உறவினர்களுக்குள் இருந்த கருத்து வேறுபாடுகள், பிரச்சினைகள் சரியாகும். மாணவர்களைப் பொறுத்தவரை கல்விரீதியாக மந்தநிலையில் இருந்து மீள்வீர்கள்.

உங்கள் பிறந்தக் கிழமைக்கான பலன்கள் இதோ!

சாமுத்ரிகா லட்சணப்படி மச்ச பலன்கள்!

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews