கன்னி புத்தாண்டு ராசி பலன் 2024!

Kanni Puthandu Rasi Palan 2024: கன்னி ராசி அன்பர்களே! 2024 ஆம் ஆண்டினைப் பொறுத்தவரை சனி பகவான் பெரிதாக எந்தவொரு இடப் பெயர்ச்சியினையும் செய்யவில்லை; வக்ரம் மட்டும் அடைகிறார்.

2024 ஆம் ஆண்டின் பாதியில் குரு பகவான் மேஷ ராசியில் இருந்து ரிஷப ராசிக்கு இடம் பெயர்கிறார். ராகு- கேது எந்தவொரு இடப் பெயர்ச்சியும் செய்யவில்லை. கன்னி ராசியினைப் பொறுத்தவரை 2023 ஆம் ஆண்டினை ஒப்பிடுகையில் 2024 ஆம் ஆண்டு ஓரளவு சுமாரான ஆண்டாகவே இருக்கும்.

சனி பகவான் 6 ஆம் இடத்திலேயே உள்ளார். வேலைவாய்ப்பினைப் பொறுத்தவரை புதிய முயற்சிகளைச் செய்ய நினைப்போர் மே மாதத்திற்குப் பின்னர் செய்யலாம்.

எந்தவொரு மாற்றங்களையும் நீங்கள் ஜனவரி முதல் ஏப்ரல் வரையிலான காலகட்டத்தில் செய்யாதீர்கள்; எதிர்காலம் குறித்த திட்டங்களை மட்டும் தீட்டி வையுங்கள்.

கேது பகவான் 1 ஆம் வீட்டில் இட அமர்வு செய்கிறார்; கேது பகவான் உங்களுக்குத் தேவையில்லாத யோசனைகளைக் கொடுத்து தவறான செயல்களைச் செய்ய வைத்துவிடுவார்.

உங்களின் உணர்வுகளை கட்டுக்குள் வையுங்கள், தியானம், யோகா போன்ற விஷயங்களை இடைவிடாது கடைபிடியுங்கள். குரு பகவான் மே மாதத்தில் இடப் பெயர்ச்சி அடைந்து 9 ஆம் இடத்திற்குப் பெயர்வதால் நீங்கள் தொழில், வேலைவாய்ப்பு சார்ந்து புது முயற்சிகளை செய்யத் துவங்கலாம்.

ராகு பகவான் 7 ஆம் இடத்தில் அமர்கிறார். தடை மாதிரியான விஷயங்களை ராகு ஏற்படுத்தினாலும் குரு பகவான் தடையினை தகர்த்து எறிவார். குரு பார்வையில் கேது உள்ளதால், கேது செய்வதை குரு பகவான் நிவர்த்தி செய்வார்.

திருமண காரியங்கள் என்று கொண்டால் ராகு- கேது இட அமைவால் நீங்கள் அதிருப்தியினை உணர்வீர்கள். எதிர்பார்த்தது போன்ற வரன் அமையாது; ஆனால் பெற்றோர் உங்களை கட்டாயப்படுத்துவர். மே மாதத்திற்குப் பின் எடுக்கும் முடிவுகள் பெரிதளவில் தவறான முடிவாக இருக்காது; ஆனால் மே மாதத்திற்கு முன்னர் பெரிய அளவிலான முடிவுகளை எடுக்காதீர்கள்.

உடல் ஆரோக்கியம் என்று பார்க்கையில் குரு பகவான் மற்றும் சனி பகவானால் பெரிய அளவில் பிரச்சினைகள் எதுவும் கிடையாது. கடந்த ஆண்டில் இருந்த உடல் தொந்தரவுகளின் பாதிப்புகள் சிறிதளவில் இருக்கும்.

இல்லத்தரசிகள் 2023 ஆம் ஆண்டினை விட ஓரளவு திருப்திகரமாக இருப்பதாக உணர்வர். மாணவர்களும் கல்விரீதியாக ஓரளவு ஆர்வத்துடன் படிப்பர்.

உங்கள் பிறந்தக் கிழமைக்கான பலன்கள் இதோ!

சாமுத்ரிகா லட்சணப்படி மச்ச பலன்கள்!

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews