கடகம் புத்தாண்டு ராசி பலன் 2024!

Kadagam Puthandu Rasi Palan 2024: கடக ராசி அன்பர்களே! 2024 ஆம் ஆண்டினைப் பொறுத்தவரை சனி பகவான் பெரிதாக எந்தவொரு இடப் பெயர்ச்சியினையும் செய்யவில்லை; வக்ரம் மட்டும் அடைகிறார்.

2024 ஆம் ஆண்டின் பாதியில் குரு பகவான் மேஷ ராசியில் இருந்து ரிஷப ராசிக்கு இடம் பெயர்கிறார். ராகு- கேது எந்தவொரு இடப் பெயர்ச்சியும் செய்யவில்லை.

கடக ராசியினைப் பொறுத்தவரை 2023 ஆம் ஆண்டு பெரிய அளவில் அனுகூலமான ஆண்டாக இருந்திருக்கவில்லை. குரு பகவான் 10 ஆம் இடத்தில் உள்ளார். வேலைவாய்ப்பினைப் பொறுத்தவரை ஜனவரி முதல் ஏப்ரல் மாதம் வரையிலான காலகட்டத்தில் பெரிய அளவில் புதிய மாற்றங்களை எதிர்பார்க்காதீர்கள்.

வேலையினை விட்டு புது வேலை தேடுதல் என்பது போன்ற புது மாற்றங்களைச் செய்யாதீர்கள். தொழில் வாழ்க்கை என்று கொண்டால் அதிக முதலீடு செய்து தொழிலை அபிவிருத்தி செய்தல், கூட்டுத் தொழில் செய்தல், அனுபவம் இல்லாத துறையில் புதிய தொழில் துவங்குதல் என்பது போன்ற விஷயங்களைச் செய்யாதீர்கள்.

ஆண்டின் பிற்பாதியில் குரு பகவான் 10 ஆம் வீட்டில் இருந்து 11 ஆம் வீட்டிற்குப் பெயர்ச்சி ஆகிறார்;  இந்த இடப் பெயர்ச்சியானது உங்களுக்கு பொருளாதார ரீதியிலான ஏற்றங்களைக் கொடுப்பதாய் இருக்கும்.

சனி பகவான் புதிதாகச் செய்யும் விஷயங்களில் உங்களுக்கு தடைகளை ஏற்படுத்துவார்; ஆனால் நீங்கள் தொடர்ந்து முயற்சி செய்யும் பட்சத்தில் சனி பகவான் ஏற்படுத்தும் தடைகளைக் கடந்து வெற்றியினைக் கொடுப்பார் குரு பகவான்.

2024 ஆம் ஆண்டு மிகச் சிறப்பாக இருக்கும் என்று சொல்ல முடியாது; ஆனால் ஒரளவு சுமாரான ஆண்டாக இருக்கும்.

மே மாதத்திற்குப் பின் திருமணம் செய்யலாம் என்ற எண்ணம் மேலோங்கும்; ஆனால் திருமண காரியங்களிலும் சரி திருமணத்திற்குப் பின்னரும் அது பெரிய அளவிலான சந்தோஷம் தருபவையாக இருக்காது.

திருமண வாழ்க்கையில் அதிருப்தி தரும் விஷயங்களை சனி பகவான் 8 ஆம் இடத்தில் இருந்து ஏற்படுத்திவிடுவார்.

உறவினர்களாலோ அல்லது குடும்ப உறுப்பினர்களாலோ பெரிய அளவில் பிரச்சினைகள் ஏற்படும். இல்லத்தரசிகள் மனதளவில் பெரிய அளவில் ஏமாற்றங்களையும் வருத்தங்களையும் கொண்டு இருப்பீர்கள்.

உடல் ஆரோக்கியம் என்று கொண்டால் நீங்கள் எச்சரிக்கையாக இருக்கும் பட்சத்தில் எந்தவொரு பிரச்சினையும் ஏற்படாது.

உங்கள் பிறந்தக் கிழமைக்கான பலன்கள் இதோ!

சாமுத்ரிகா லட்சணப்படி மச்ச பலன்கள்!

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.