தனுசு புத்தாண்டு ராசி பலன் 2024!

Dhanusu Puthandu Rasi Palan 2024: தனுசு ராசி அன்பர்களே! 2024 ஆம் ஆண்டினைப் பொறுத்தவரை சனி பகவான் பெரிதாக எந்தவொரு இடப் பெயர்ச்சியினையும் செய்யவில்லை; வக்ரம் மட்டும் அடைகிறார்.

2024 ஆம் ஆண்டின் பாதியில் குரு பகவான் மேஷ ராசியில் இருந்து ரிஷப ராசிக்கு இடம் பெயர்கிறார். ராகு- கேது எந்தவொரு இடப் பெயர்ச்சியும் செய்யவில்லை.

தனுசு ராசியினைப் பொறுத்தவரை சனி பகவான் 3 ஆம் இடத்தில் இட அமர்வு செய்துள்ளார். சனி பகவானால் எந்தவித தொந்தரவும் இல்லை. ராகு பகவான் 4 ஆம் இடத்தில் இட அமர்வு செய்துள்ளார். குரு பகவான் 5 ஆம் இடத்தில் இட அமர்வு செய்துள்ளார்.

ராகு பகவான் வேலை சார்ந்த இட மாற்றங்கள், பதவி மாற்றங்களைச் செய்வார். உங்கள் ராசிநாதன் 5 ஆம் இடத்தில் இருப்பதால் உங்கள் புத்தி மிகவும் கூர்மையுடன் இருக்கும். மிகச் சிறந்த புரிதலுடன் வாழ்க்கையினை அணுகுமுறை செய்வீர்கள்.

மே மாதத்திற்குப் பின் குருவின் பார்வை கேது பகவான் மீது விழுகின்றது. 2024 ஆம் ஆண்டு மிகவும் மோசமானதாக இருக்காது; ஓரளவு சுமாரான ஆண்டாகவே இருக்கும்.

ஏற்கனவே ஒரு வேலை செய்து கொண்டு இருக்கிறீர்கள் என்றால் பெரிய அளவில் மாற்றங்கள் எதையும் நீங்களாகச் செய்யாதீர்கள்; நடக்கும் விஷயங்களை அப்படியே ஏற்றுக் கொள்ளுங்கள். இருக்கும் வேலை, இருக்கும் இடம் போன்றவை ஓரளவு சிறப்பாகவே இருக்கும் பட்சத்தில் மாற்றங்களை நோக்கி திட்டமிடாதீர்கள்.

திருமண காரியங்கள் என்று கொண்டால் ஜனவரி முதல் ஏப்ரல் வரையிலான காலகட்டத்தில் வரன்கள் அமையப் பெறும், மே மாதத்திற்குப் பின் திருமண காரியங்களில் தடைகள், இழுபறிகள் நீடிக்கும். அரசு சார்ந்த கடனுதவிகள் கிடைக்கப் பெறும். ஏற்கனவே வாங்கிய கடன்களை அடைப்பீர்கள்.

உடல் ஆரோக்கியம் என்று கொண்டால் ராகு பகவான் 4 ஆம் இடத்தில் இருப்பதால் பெரிய அளவில் தொந்தரவுகள் இல்லாவிட்டாலும் சிறு சிறு தொந்தரவுகள் இருந்து கொண்டே இருக்கும்.

குடும்ப வாழ்க்கை என்று கொண்டால் பலவகையான மன நெருக்கடிகளில் இருந்து தற்போது வெளிவந்து உள்ளீர்கள்.

உங்கள் பிறந்தக் கிழமைக்கான பலன்கள் இதோ!

சாமுத்ரிகா லட்சணப்படி மச்ச பலன்கள்!

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.