AI டெக்னாலஜியால் மே மாதத்தில் மட்டும் 4000 பேர் வேலையிழப்பு.. அதிர்ச்சி தகவல்..!

உலகம் முழுவதும் பெரிய மற்றும் சிறிய நிறுவனங்கள் அவ்வப்போது பணி நீக்க நடவடிக்கைகளை எடுத்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். அந்த வகையில் மே மாதத்தில் மட்டும் சுமார் 80 ஆயிரம் பேர் வேலை இழந்து உள்ள நிலையில் அதில் 4000 பேர் AI டெக்னாலஜி காரணமாக வேலை இழந்துள்ளனர் என்ற தகவல் பெறும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

AI டெக்னாலஜி என்பது தற்போது வளர்ந்து வரும் மிகப்பெரிய டெக்னாலஜியாக இருந்து வருகிறது என்பதும் இந்த டெக்னாலஜி 50 முதல் 100 பேர்கள் வரை செய்யும் வேலையை ஒரு சில மணி நேரத்தில் முடித்து விடுகிறது என்பதையும் பார்த்து வருகிறோம். இதனால் அனைத்து துறைகளிலும் வேலை இழப்பு ஏற்பட்டு வருகிறது என்பதும் இன்னும் அதிக நபர்கள் வேலை இழக்க வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.

அந்த வகையில் உலகம் முழுவதும் உள்ள பெரிய மற்றும் சிறிய நிறுவனங்களில் மே மாதத்தில் மற்றும் 80,000 பேர் வேலை இழந்து உள்ள நிலையில் அதில் 4000 பேர் AI டெக்னாலஜியால் மட்டுமே வேலை இழந்துள்ளனர் என்ற தகவல் பெறும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

layoff1 கடந்த ஏப்ரல் மாதத்தில் 73 ஆயிரம் பேர் வேலை இழந்த நிலையில் மே மாதத்தில் 80,000 பேர் வேலை இழந்து உள்ளனர் என்பதும் 2022 ஆம் ஆண்டு ஜனவரிக்கு பிறகு 80 ஆயிரம் பேர் வேலை இழந்தது இதுவே முதல்முறை என்றும் சேலஞ்சர், கிரே & கிறிஸ்மஸ் என்ற நிறுவனத்தின் அறிக்கை கூறியுள்ளது.

பொருளாதார மந்தநிலை, அதிகரித்து வரும் பணவீக்கம், உக்ரைனில் நடந்து வரும் போர் உள்ளிட்ட பல காரணங்களால் தொழில்நுட்ப நிறுவனங்களின் பணிநீக்க நடவடிக்கை அதிகரிப்புக்கு காரணமாக கூறப்படுகிறது. முன்பு மனிதர்கள் செய்த பணிகளில் தற்போது AI டெக்னாலஜி அதிகளவில் பயன்படுத்தப்பட்டு வருகிறது, இதனால் சில துறைகளில் வேலை இழப்புக்கு வழிவகுக்கிறது என்று கூறப்படுகிறது.

layoffAI டெக்னாலஜி என்பது புதிய வேலைகளை உருவாக்கும் திறன் கொண்ட ஒரு தொழில்நுட்பம் மட்டுமல்ல என்றும், பல துறைகளில் வேலை இழப்புகளுக்கும் வழிவகுக்கும் என்பதை நினைவூட்டுகிறது என அந்த அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளது.. AI டெக்னாலஜி தொடர்ந்து வளர்ச்சியடைந்து வருவதால் வேலைநீக்க நடவடிக்கை இன்னும் அதிகமாகும் என்று கூறப்படுகிறது.

AI டெக்னாலஜி சில வேலை இழப்புகளுக்கு வழிவகுக்கும் அதே வேளையில், இது மற்ற பகுதிகளிலும் புதிய வேலைகளை உருவாக்குகிறது. எடுத்துக்காட்டாக, டேட்டா சயன்ஸ், மெஷின் லர்னிங் மற்றும் செயற்கை நுண்ணறிவு பொறியியல் போன்ற துறைகளில் புதிய வேலைகளை உருவாக்க AI டெக்னாலஜி பயன்படுத்தப்படுகிறது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews