தளபதி விஜய் உடன் நடிக்க மறுத்த நயன்தாரா! எந்த படத்தில் தெரியுமா?

தளபதி விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ திரைப்படம் கடந்த மாதம் 19ஆம் தேதி உலக அளவில் வெளியாகி வசூலில் சாதனை படைத்து வருகிறது. மல்டி ஸ்டார் படமாக உருவாகியுள்ள லியோ திரைப்படம் இதுவரை 600 கோடிக்கு மேல் வசூல் சாதனை செய்துள்ளதாக கூறப்படுகிறது. சமீபத்தில் இந்த திரைப்படத்தின் வெற்றி விழா கொண்டாட்டம் கடந்த ஞாயிற்றுக்கிழமை மிக பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதில் இந்த படத்தில் நடித்த சில முக்கியமான நடிகர்கள் மட்டுமே கலந்து கொண்டுள்ளனர்.

லியோ திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து தளபதி விஜய் அடுத்ததாக வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிக்க உள்ளார். வெங்கட் பிரபு இயக்கம் தளபதி 68 படத்தின் பூஜை விழா வீடியோ கடந்த மாதம் வெளியாகி மக்களிடையே ஒரு அதிர்வை ஏற்படுத்தி இருந்தது. அதைத் தொடர்ந்து இந்த படத்தின் முதல் பாடல் காட்சிகள் படமாக்கப்பட்டு முடிந்துள்ளது. தற்பொழுது அடுத்த ஷெடுலிற்காக படக்குழு தாய்லாந்து சென்றுள்ளது. இந்த படத்தில் லைலா, சினேகா என முன்னணி கதாநாயகர்களுடன் பிரசாந்த், பிரபுதேவா என 90களில் கலக்கிய ஹீரோக்களும் இணைந்துள்ளனர். மேலும் இந்த படத்தில் மைக் மோகன் வில்லன் ஆக களமிறங்க உள்ளார்.

இந்த திரைப்படம் அடுத்த ஆண்டு கோடை விடுமுறைக்கு வெளியாக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. அடுத்தடுத்து படப்பிடிப்புகளில் பிஸியாக நடித்து வரும் தளபதி விஜய் ரசிகர்கள் கொண்டாடும் ஹீரோவாக வலம் வருகிறார். அந்த வகையில் 2005 ஆம் ஆண்டு நவம்பர் ஒன்றாம் தேதி தீபாவளியை முன்னிட்டு வெளியான திரைப்படம் சிவகாசி. இந்த படத்தில் விஜய் ஹீரோவாகவும் அசின் ஹீரோயின் ஆகவும் நடித்திருப்பார். இந்தப் படத்தில் பிரகாஷ்ராஜ் வில்லன் கதாபாத்திரத்தில் கலக்கியிருப்பார். இயக்குனர் பேரரசு எழுதி இயக்கிய இந்த திரைப்படம் 150 திரையரங்குகளுக்கு மேல் வெளியாகி பாக்ஸ் ஆபிஸில் நல்ல வசூலை பெற்றுக் கொடுத்தது.

இந்தப் படத்தில் அசின் முன்னணி கதாநாயகியாக விஜய்க்கு ஜோடியாக நடித்திருந்தாலும் படத்தில் ஒரு குத்துப் பாடல் இடம் பெற்றிருக்கும். அந்த பாடலுக்கு நடிகை நயன்தாரா நடனமாடி இருப்பார். முதலில் இந்த பாடலில் நடனமாட நயன்தாரா மறுத்துள்ளார். அதற்கு காரணம் தமிழ் சினிமாவில் ஐயா திரைப்படத்தின் மூலம் அறிமுகமான நயன்தாரா அடுத்த படத்திலேயே சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் இணைந்து சந்திரமுகி திரைப்படத்தில் ஜோடியாக நடித்திருப்பார்.

மிகக் குறைந்த பட்ஜெட்டில் உருவாகி கோடிக்கணக்கில் வசூலை அள்ளிக் கொடுத்த விஜய் சேதுபதியின் திரைப்படங்கள்!

அந்த திரைப்படம் நடிகை நயன்தாராவிற்கு நல்ல பெயரையும், புகழையும் பெற்றுத் தந்திருந்தது. அந்த நேரத்தில்தான் பேரரசு இயக்கம் சிவகாசி திரைப்படத்தின் ஒரு பாடலுக்கு நடனமாட வாய்ப்பு கேட்கப்பட்டது. அப்பொழுது அந்த ஒரு பாடல் என்பது ஐட்டம் பாடல் ஆக இருக்கும் என நினைத்து நயன்தாரா முதலில் அந்த பாடல் வாய்ப்பை மறுத்துள்ளார். அதன் பின் இயக்குனர் பேரரசு நயன்தாரா அவர்களை நேரில் சந்தித்து படத்தில் கதையின் முக்கியத்துவத்தையும் அந்த பாடலின் முக்கியத்துவத்தையும் எடுத்துக் கூறிய பின் நயன்தாரா அந்த பாடலுக்கு நடனமாட ஒப்புக்கொண்டுள்ளார்.

மேலும் நயன்தாராவிற்காக அந்த பாடலில் சில வரிகளை தான் மாற்றி உள்ளதாகவும் இயக்குனர் பேரரசு கூறியிருந்தார். கோடம்பாக்கம் ஏரியா என தொடங்கும் அந்த பாடலில் சூப்பர் ஸ்டாருக்கு ஜோடி தான் கூட ஆடுறேன் என்னும் வார்த்தைகளை நயன்தாராவின் வருகைக்குப் பின் மாற்றியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். இப்படி நயன்தாரா விஜய்யுடன் சேர்ந்து ஆடும் வாய்ப்பை முதலில் மறுத்தாலும் அதன் பின் சிவகாசி படத்தில் ஒன்றாக இணைந்து அந்த குத்து பாடலுக்கு நடனமாடி இருப்பார். அதை தொடர்ந்து தளபதி விஜய் மற்றும் நயன்தாரா பல திரைப்படங்களில் இணைந்து நடித்துள்ளனர்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...