மிகக் குறைந்த பட்ஜெட்டில் உருவாகி கோடிக்கணக்கில் வசூலை அள்ளிக் கொடுத்த விஜய் சேதுபதியின் திரைப்படங்கள்!

தமிழ் சினிமாவில் துணை கதாபாத்திரங்களில் நடித்து பின்பு படிப்படியாக முன்னேறி ஹீரோவாக மாறி மக்கள் மனதில் நீங்காத இடம் பிடித்த நடிகர்களில் ஒருவர் மக்கள் செல்வம் விஜய் சேதுபதி. இவரின் திரைப்படங்களைக் கொண்டாட ஒரு தனி ரசிகர் கூட்டமே உள்ளது. ஹீரோவாக வலம் வந்த விஜய் சேதுபதி தற்பொழுது பல முன்னணி ஹீரோக்களின் திரைப்படங்களில் வில்லனாக நடித்து வருகிறார்.

முதல் முதலில் சுந்தரபாண்டியபுரம் திரைப்படத்தில் வில்லனாக தொடங்கிய திரைப்பயணம் அடுத்ததாக ரஜினியின் பேட்ட திரைப்படத்திலும், விஜய்யின் மாஸ்டர் திரைப்படத்தில் விஜய்க்கு வில்லனாக நடித்திருப்பார். அதை தொடர்ந்து கமலின் விக்ரம் திரைப்படத்திலும் தெறிக்கவிடும் வில்லனாக கமலுக்கு இணையாக டப் கொடுத்திருப்பார். அதைத் தொடர்ந்து தெலுங்கிலும் உப்பெனா திரைப்படத்தில் யாரும் எதிர்பார்க்காத விதத்தில் வில்லத்தனத்தில் கலக்கி இருப்பார் மேலும் புஷ்பா 2 திரைப்படத்தில் வில்லனாக நடிக்க இருந்த வாய்ப்பு கால்ஷீட் காரணமாக நடிக்க முடியவில்லை.

தமிழ், தெலுங்கு மட்டுமல்லாமல் சமீபத்தில் ஹிந்தியில் ஷாருக்கான் நடித்த ஜவான் படத்திலும் விஜய் சேதுபதி வில்லனாக நடித்து உலக சினிமாவை தன் பக்கம் திரும்பி பார்க்க வைத்தார். மீண்டும் கமலுடன் இணையும் விஜய் சேதுபதி இந்தியன் 2 திரைப்படத்தில் கமலுக்கு வில்லனாக நடிக்க உள்ளார். அடுத்தடுத்து வில்லன் கதாபாத்திரத்தில் கலக்கி வரும் விஜய் சேதுபதி தான் வில்லனாக நடிக்கும் ஒவ்வொரு படத்திற்கும் 25 கோடிக்கு மேல் சம்பளம் வாங்கி வருவதாக கூறப்படுகிறது.

மேலும் விஜய் சேதுபதி தனது ஐம்பதாவது படமான மகாராஜா படத்தில் ஹீரோவாக மாஸ் காட்ட உள்ளார். இயக்குனர் நித்திலன் இயக்கத்தில் விஜய் சேதுபதி ஹீரோவாக நடிக்கும் இந்த படத்தில் பிரம்மாண்ட இரு வில்லன்கள் களமிறங்க உள்ளனர். இந்த படத்தில் அனுராக் காஷ்யப் மற்றும் நட்டி வில்லனாக நடிக்க உள்ளதாக தகவல் வெளியாக இருந்தது. இதைத்தொடர்ந்து நடிகர் விஜய் சேதுபதி பிரபல பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத்வுடன் இணைந்து ஒரு படத்தில் நடிக்க உள்ளார்.

அடுத்தடுத்து பல படப்பிடிப்புகளில் பிஸியாக இருக்கும் விஜய் சேதுபதியின் தொடக்க காலங்களில் வெளியான பல படங்கள் மிக குறைந்த பட்ஜெட்டில் வெளியாகி தயாரிப்பாளர்களின் மனதை குளிர வைக்கும் அளவிற்கு மிகப்பெரிய வசூலை வாரி கொடுத்துள்ளது. அந்த வகையில் நடிகர் விஜய் சேதுபதி தமிழ் சினிமாவில் ஹீரோவாக என்ட்ரி கொடுத்த திரைப்படம் தென்மேற்கு பருவக்காற்று. இந்த திரைப்படம் வசூலில் பெரிதளவு சாதனை செய்யவில்லை.

அதைத்தொடர்ந்து விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான திரைப்படம் பீட்சா இந்த திரைப்படம் வெறும் ஒன்றரை கோடி பட்ஜெட்டில் உருவாகி 8 கோடிக்கு மேல் வசூல் சாதனை செய்திருந்தது.

அடுத்ததாக விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான நடுவில் கொஞ்சம் பக்கத்தை காணும் திரைப்படம். இந்த திரைப்படம் வெறும் 80 லட்சம் பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு ஆறு கோடி வரை வசூல் சாதனை செய்துள்ளது.

அடுத்ததாக நாம் பார்க்கும் திரைப்படம் நலன் குமாரசாமி இயக்கத்தில் வெளியான சூது கவ்வும். இரண்டு கோடி பட்ஜெட்டில் உருவாக்கி 35 கோடிக்கு மேல் வசூல் சாதனை படைத்திருந்தது.

நடிகர் சிவகுமாரின் தனிப்பட்ட வாழ்க்கையில் பல உதவிகள் செய்த சிவாஜி கணேசன்!

நான்காவதாக நாம் பார்க்கும் திரைப்படம் தர்மதுரை. சீனு ராமசாமி இயக்கத்தில் வெளியான இந்த திரைப்படம் 13 கோடி பட்ஜெட்டில் உருவாக்கப்பட்டு 25 கோடிக்கு மேல் வசூல் சாதனை செய்திருந்தது.

இறுதியாக நாம் பார்க்கும் திரைப்படம் விஜய் சேதுபதி போலீஸ் கெட்டப்பில் மாசாக நடித்திருந்த சேதுபதி திரைப்படம். இந்த திரைப்படம் வெறும் ஒரு கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட 30 கோடிக்கு மேல் வசூல் சாதனை செய்து பாக்ஸ் ஆபிஸில் தெறிக்கவிட்டுள்ளது. இப்படி மிக குறைந்த பட்ஜெட்டில் படங்களை நடித்து மக்கள் மனதில் நீங்காத இடம் பெற்றுள்ளார் நடிகர் விஜய் சேதுபதி.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews