சூப்பர் ஸ்டார் பட்டத்தின் மீது பயம் தான் உள்ளது ஆசையில்லை!! பேட்ட நடிகர் நவாசுதீன் சித்திக்

நவாசுதீன் சித்திக் பாலிவுட் நடிகராவார். டெல்லியில் உள்ள தேசிய நாடகப்பள்ளியில் பயின்றவர் நவாசுதீன். நீண்ட காலமாக சினிமாவில் நடிப்பதற்கு முயற்சி செய்து வந்தவர். சரியான வாய்ப்புகள் அமையவில்லை.

பட வாய்ப்புகள் தான் கிடைக்கவில்லை. டிவி சிரியல்களில் நடிக்கலாம் என முயற்சித்த நவாசுதீனுக்கு அதிலும் பெருத்த ஏமாற்றம் அங்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை. அமீர் கான் நடித்த சர்வரோஷ் படத்தில் சிறிய ரோல் ஒன்றில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.

அதன் மூலம்தான் நடிகராக அறிமுகமானார் நவாசுதீன். இப்படி சிறு கதாபாத்திரங்களில் நடித்து கொண்டிருந்த நவாசுதீனுக்கு தங்கும் இடத்திற்கான வாடகையை கொடுக்க முடியாமல் அவதி பட்டிருக்கிறார்.

தன்னுடைய காலேஜ் சீனியர் ஒருவரின் உதவியை நாடி இருக்கிறார். அவரும் நவாசுதீன் தங்குவதற்கான உதவியை செய்து கொடுத்திருக்கிறார். 2010ல் பீப்ளி லைவ் என்ற படத்தில் பத்திரிக்கையாளராக நடித்திருந்தார்.

அந்த படத்தின் மூலம் ஒரு சிறந்த நடிகராக நவாசுதீன் அடையாளம் காணப்பட்டார். 2012ல் வித்யா பாலனுடன் இணைந்து கஹானி படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். அதுவரை சப்போர்டிங் கேரக்டரில் மட்டுமே நடித்து வந்த, நவாசுதீன் கேங்க்ஸ் ஆஃப் வாசிப்பூர் படத்தின் மூலம் ஹீரோ ஆனார்.

இந்த படம் தமிழில் வெளியான சுப்பிரமணியபுரம் படத்தால் ஈர்க்கப்பட்டு எடுத்ததாக படத்தின் இயக்குனர் அனுராக் கூறினார். இந்த படத்திற்கு பின் இர்பான் கான் நடித்து சூப்பர் ஹிட்டான லன்ஞ்ச் பாக்ஸ் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நவாசுதீன் சித்திக்கும் நடித்திருப்பார்.

பல விருதுகளை வாங்கி குவித்த படம் லன்ஞ்ச் பாக்ஸ் அப்படம் நவாசுதீனுக்கும் பெரும் புகழை தேடிக் கொடுத்தது. இவர் சூப்பர் ஸ்டார் நடித்த பேட்ட படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். பெரும் போராட்டங்களுக்கும், முயற்சிகளுக்கும் பிறகு திறமையான நடிகராக வலம் வருபவர் நவாசுதீன் சித்திக்.

அவர் கோவாவில் நடைபெற்று வரும் திரைப்பட விழாவில் கலந்து கொண்ட போது பத்திரிக்கையாளர்கள் அவரிடம் சூப்பர்ஸ்டார் பட்டம் பற்றிய கருத்தை கேட்டிருக்கிறார்கள். அதற்கு நவாசுதீன் சூப்பர் ஸ்டார் பட்டம் என்றால் பயமாகத்தான் இருக்கிறது. அதன் மீது ஆசையெல்லாம் இல்லை. நான் ஒரு நடிகர் அவ்வளவுதான். அதற்கு மேல் இந்த பட்டங்களுக்கு எல்லாம் ஆசைப்பட வில்லை என்று கூறியிருக்கிறார்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.