பலத்த காயத்தால் சிதைந்த முகம்.. இனி இந்த மூஞ்சிக்கு சினிமாவா? மாற்றிய பாரதிராஜா.. சாதித்த ஜனகராஜ்..

1980,90களில் தமிழ் சினிமாவின் மிகப்பெரும் காமெடி ஜாம்பவான்களாக விளங்கியவர்கள் கவுண்டமணி மற்றும் செந்தில். இவர்கள் இருவருக்குமே மாற்றாக வந்தவர்தான் ஜனகராஜ். சென்னையில் பிறந்த ஜனகராஜ் சிறுவயதிலிருந்தே நாடகங்களில் நடித்து பின் சினிமா வாய்ப்புத் தேடியபோது கே.பாலச்சந்திரின் அறிமுகத்தால் சினிமாவில் நுழைந்தவர்.

ஆரம்பத்தில் சிறுசிறு கதாபாத்திரங்களில் நடித்து வந்தவரை புகழினின் உச்சிக்குக் கொண்டு சென்ற படம் தான் பாலைவனச் சோலை. இதில் 5 நண்பர்களில் ஒருவராக நடித்திருப்பார் ஜனகராஜ்.

ஆனால் அதற்கு முன்பே பாரதிராஜா இவரை பயன்படுத்திக் கொண்டார். பாரதிராஜாவின் நிழல்கள், கல்லுக்குள் ஈரம் போன்ற படங்களில் நடித்திருந்தார். இந்நிலையில் ஒருநாள் ஷுட்டிங் முடித்துவிட்டு நடு இரவில் திரும்பும் போது திடீரென அவர் பயணித்த காரின் மீது ஓங்கி ஒரு கல் வந்து விழுந்தது. அந்தக் கல் ஜனகராஜின் முகத்தைப் பதம் பார்க்க ஒருபக்கமே சிதைந்தது.

நள்ளிரவில் குடிபோதையில் கொள்ளையர்கள் அவர்மீது கொலைவெறித் தாக்குதல் நடத்த அதில் அவரது முகம் பாதிக்கப்பட்டது. அவரை ஆபத்திலிருந்து காப்பாற்றியவர்கள் ராபர்ட்-ராஜசேகர் இயக்குநர்கள். ஹீரோவாக நடிக்க வாய்ப்புகள் வந்துகொண்டிருந்த தருணத்தில் விழுந்த இந்த அடியால் அவரின் சினிமா வாழ்க்கை கேள்விக்குறியானது.

நீ இந்தப் பாட்டுக்குத் தான் லாயக்கு… தூற்றியவர்கள் முன் ஹைபிட்சில் பாடல் பாடி பதிலடி கொடுத்த சைந்தவி..

கிட்டத்தட்ட 1 வருடமாக சிகிச்சை எடுத்துக் கொண்டு மீண்டு வந்தவர் கண்ணாடியில் தனது முகத்தைப் பார்க்க அதிர்ந்து போயிருக்கிறார். இனி சினிமா அவ்வளவுதான் என்றிருக்கையில் அப்போது பாரதிராஜாவிடம் இருந்து அழைப்பு வந்திருக்கிறது. ஒரு படம் இயக்கப் போகிறேன். அதில் நீதான் ராதாவுக்கு ஜோடி என்று கூற ஜனகராஜுக்கு என்ன சொல்வது என்றே தெரியவில்லை. அந்தப் படம் தான் காதல் ஓவியம்.

இந்தப் படத்தில் ராதாவின் கணவனாக ஜனகராஜ் நடித்திருப்பார். தன் மேல் மீண்டும் நம்பிக்கை வைத்து வாய்ப்பினை அளித்த பாரதிராஜாவின் காதல் ஓவியம் படத்தில் நடித்தபின் அடுத்த 25 ஆண்டுகளுக்கு ஜனகராஜ் மிக பிஸியான நடிகராக மாறினார். குணச்சித்திரம்,வில்லன், காமெடி என அனைத்து கதாபாத்திரங்களிலும் கலக்கினார். குறிப்பாக ரஜினி, கமலுடன் அதிகப் படங்களில் நடித்துள்ளார் ஜனகராஜ். தங்கச்சிய நாய் கடிச்சிடுச்சுபா.. என் பொண்டாட்டி ஊருக்குப் போயிட்டா போன்ற வசனங்கள் ஜனகராஜின் புகழ்பெற்ற வசனங்களாகத் திகழ்கிறது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...