மதன்பாப் சிரிப்புக்குப் பின்னால் இருக்கும் ரகசியம்.. இப்படித்தான் சிரிப்பு பேமஸ் ஆச்சா?

தமிழ் சினிமாவில் எத்தனையோ சிரிப்பு நடிகர்கள் இருந்தாலும் கவலை மறந்து உற்சாகம் சிரிப்பையே தங்களது நடிப்பாக்கி புகழ்பெற்றவர்கள் இரண்டு நடிகர்கள். ஒருவர் குமரி முத்து. மற்றொருவர் மதன்பாப். இருவருக்குமே மூலதனம் இவர்களது சிரிப்பு மட்டுமே. குமரிமுத்துவின் தனித்துவமான சிரிப்பை மிமிக்ரி செய்யாத கலைஞர்களே கிடையாது. அதேபோல்தான் நடிகர் மதன்பாப்-ன் சிரிப்பும்.

சென்னை திருவல்லிக்கேணியில் பிறந்த மதன்பாப்-ன் இயற்பெயர் கிருஷ்மூர்த்தி. கிடார் வாசிப்பதில் மிகுந்த வல்லவரான கிருஷ்ணமூர்த்தி ஆர்கெஸ்ட்ராவில் சேர்ந்து கிடார் இசைக்க ஆரம்பித்தார். இவரை வீட்டில் மதன் என்றுதான் அழைப்பார்களாம். மேலும் இவரது தம்பியின் பெயர் பாபு. எனவே இரண்டு பெயர்களையும் சேர்த்து மதன்பாபு என்றாகி பின் மதன்பாப் ஆனது. நடிப்பிற்கு முன்னர் கிட்டார் இசைக்கருவியை வாசிப்பதில் வல்லவரான மதன்பாப் பல இசையமைப்பாளர்களுடன் இணைந்து கிடார் வாசித்துள்ளார்.

மேலும் இவரது அடையாளமே இவரது சிரிப்புதான். 1984-ல் பாலுமகேந்திரா இயக்கத்தில் வெளிவந்த நீங்கள் கேட்டவை படத்தில் தியாகராஜனுடன் இவர் கீபோர்டு, கிடார் வாசித்துக்கொண்டே ஆடும் அடியே மனம் நில்லுனா நிக்காதடி என்ற பாடல் இவரை பிரபலப்படுத்தியது. இவரது தந்தை நண்பர்களுடன் பேசிக்கொண்டிருக்கும் போது அடிக்கடி சிரிப்பதை வழக்கமாகக் கொண்டிருப்பாராம். அந்தப் பழக்கம் மதன்பாப்-க்கும் தொற்றிக் கொண்டது. இவர் அடிக்கடி சிரிப்பதைப் பார்த்த இயக்குநர் சிகரம் கே.பாலச்சந்தர் வானமே எல்லை படத்தில் நடிக்க வைக்கும் போது இவரது சிரிப்பையே அடையாளமாக்கினார்.

பலத்த காயத்தால் சிதைந்த முகம்.. இனி இந்த மூஞ்சிக்கு சினிமாவா? மாற்றிய பாரதிராஜா.. சாதித்த ஜனகராஜ்..

தொடர்ந்து இவரது சிரிப்பை வைத்தே இவருக்கு பல கதாபாத்திரங்கள் உருவாக்கப்பட்டன. சினிமாவில் நடித்து வருபவர் கிட்டத்தட்ட 200-க்கும் அதிகமான படங்களில் நடித்துள்ளார்.மேலும் கிடார் இசைக் கருவியை வாசிப்பதையும் நிறுத்தவில்லை. திரைப்படங்களில் நடிப்பதோடு மட்டுமல்லாமல் சன்டிவியில் ஒளிபரப்பான அசத்தப்போவது யாரு நிகழ்ச்சியில் நடுவராகவும் பங்கேற்றார். மேலும் பல நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கியுள்ளார் மதன்பாப். இவரது மகள் ஜனனியும் இசைக் கலைஞராகவும், பின்னனிப் பாடகியாகவும் வலம் வருகிறார்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...